Byri Blue Sattai Maran Review: பைரி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனம் கொடுத்த ப்ளூ சட்டை மாறன்

சென்னை: ஜான் கிளாடி இயக்கியுள்ள பைரி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. புதுமுக நடிகர்கள் நடித்துள்ள இந்தப் படம் புறா பந்தயத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. மினிமம் பட்ஜெட்டில் உருவான பைரி படத்துக்கு பாசிட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார் ப்ளூ சட்டை மாறன். அவரது விமர்சனத்தை தற்போது பார்க்கலாம்.

பைரி ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
ஜான் கிளாடி என்பவர் இயக்கியுள்ள பைரி திரைப்படம் நேற்று வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. நாகர்கோவில் கதைகளத்தில் புறா பந்தயத்தை பின்னணியாக வைத்து உருவாகியுள்ளது. இந்தப் படத்திற்கு விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், பாசிட்டிவாகவே ரிப்போர்ட் கொடுத்துள்ளார். பைரி படத்தின் கதையே வித்தியாசமாக இருப்பதாக கூறியுள்ள அவர், மேக்கிங் பற்றியும் பாராட்டியுள்ளார்.

 Byri Blue Sattai Maran Review: Blue Sattai Maran gave a positive review for the Byri Movie

பைரி படத்தின் கதை பற்றி கூறியுள்ள ப்ளூ சட்டை மாறன், நாகர்கோவில் பகுதியில் புறா பந்தயம் என்பது பல ஆண்டுகள் பாரம்பரியமாக நடைபெற்று வருகிறது. இதில் ஹீரோவை புறா பந்தயத்தில் கலந்துகொள்ள கூடாது என அவரது அம்மா கட்டுப்பாடு போட்டு வைக்கிறார். புறா பந்தயத்தால் ஹீரோவின் அப்பா, தாத்தா ஆகியோர் தொழிலில் கவனம் செலுத்தாமல் குடும்பம் மோசமான நிலைக்குச் செல்கிறது. இதனால் மகனை படிக்க வைத்து பெரிய ஆளாக வரவைக்க வேண்டும் என நினைக்கிறார் ஹீரோவின் அம்மா.

ஆனால், படிக்க வேண்டுமென்றால் புறா பந்தயத்தில் பங்கேற்க அனுமதி தர வேண்டும் என அம்மாவிடம் கோரிக்கை வைக்கும் ஹீரோ, கடைசியில் தனது லட்சியத்தையும் அம்மாவின் கனவையும் நனவாக்கினாரா என்பது தான் கதை எனக் கூறியுள்ளார். அதேபோல் இந்தப் படத்தின் மிகப் பெரிய ப்ளஸ் என்றால் அது வெறும் புறா வளர்க்கும் கதையாக மட்டும் இல்லாமல், புறா வளர்ப்பவர்களின் வாழ்க்கை முறை எப்படி இருக்கும், புறாக்களுக்கு எப்படி பயிற்சி கொடுக்குறாங்க, அவங்களுக்குள்ள வர்ற பிரச்சினை என்ன, போட்டிக்கு எப்படி தயார்படுத்துறாங்க என இதெல்லாம் ரொம்ப ஆராய்ச்சி பண்ணி காட்சிப்படுத்திருப்பதாக பாராட்டியுள்ளார்.

பைரி படம் முழுவதும் கதை நடக்கும் கதைகளத்திற்கே நம்மை அழைத்துச் செல்கிறது. அதேபோல் நாகர்கோவில் வட்டார வழக்கும் ரசிகர்களை படத்துடன் ஒன்றச் செய்துவிடுகிறது. முக்கியமாக இந்த கதையை இயக்குநர் நினைத்தபடி ராவாக எடுத்திருப்பதும் பெரிய ப்ளஸ். புறா பந்தயம் எப்படி நடக்கும் என்பதை விஷுவலாக ஷூட் செய்தது வியக்க வைத்துள்ளதாகவும் கூறியுள்ளார். ஆனால் இரண்டாம் பாதி தான் படத்தின் மைனஸ் எனவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் கொடுத்துள்ளார்.

அதேபோல் பைரி படத்தை இரண்டு பாகங்களாக எடுத்துள்ளனர். தற்போது வெளியான முதல் பாகம் க்ளைமேக்ஸ் இல்லாமல் இருப்பதால், ரசிகர்களுக்கு முழுமையான திருப்தியை கொடுக்கவில்லை. ஆனால் நடிகர்கள் முதல் ஜூனியர் ஆர்ட்டிஸ்ட்கள் வரை அனைவரும் நன்றாக நடித்துள்ளனர். ஒட்டுமொத்தமாக பைரி திரைப்படம் தியேட்டரில் சென்று பார்க்க வேண்டிய மெட்டீரியல் எனவும் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார். அதேபோல் சினிமோட்டோகிராபி, பிஜிஎம் என டெக்னிக்கலாகவும் பைரி நன்றாக வைந்துள்ளது எனக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X