Byri: மஞ்சுமெல் பாய்சுக்கு கொடுத்த ஆதரவை தமிழ் படமான பைரிக்கு கொடுத்திருக்கலாம்- இயக்குநர் ஆதங்கம்!

சென்னை: நாகர்கோயிலை மையமாக கொண்டு புறா பந்தயத்தின் பின்னணியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது பைரி. அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி இயக்கி நடித்துள்ள இந்தப் படம் அதிகமான திரையரங்குகளில் வெளியிடப்பட்ட நிலையில் தற்போது திரையரங்குகளின் எண்ணிக்கை 16ஆக குறைந்துள்ளது. மலையாள படமான மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு கொடுத்த ஆதரவை தமிழ் சினிமாவிற்கு ரசிகர்கள் கொடுக்காதது ஏன் என்று தற்போது இயக்குநர் ஜான் கிளாடி பில்மிபீட்டிற்கு கொடுத்துள்ள பேட்டியில் தன்னுடைய ஆதங்கத்தை வெளியிட்டுள்ளார்.

இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது பைரி படம். படத்தில் அறிமுக இயக்குநர் மட்டுமில்லாமல் ஹீரோ உள்ளிட்ட சிலரும் அறிமுகங்களாகவே இருந்தாலும் மிகப்பெரிய அளவில் தங்களது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருந்தனர். குறிப்பாக நாயகனாக நடித்துள்ள சையத் மஜீத் கோபக்கார இளைஞனை சிறப்பான உடல்மொழியால் பிரதிபலித்துள்ளார். புறா பந்தயத்தால் தன்னுடைய மகனின் வாழ்க்கை நாசமாகக்கூடாது என்று நினைக்கும் அம்மாவாக விஜி சேகர், பண்ணையார் ரமேஷ், வில்லத்தனத்தில் மாஸ் காட்டும் சுயம்பு ஆகியோர் இந்தப் படத்தில் லீட் கேரக்டர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர்.

Byri movie director John Glady expressed his sadness about response of the movie

பைரி படம்: நடிகர் சையத் மஜித், விஜி சேகர், மேக்னா எலன், சரண்யா, உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த சில தினங்களுக்கு முன்பு திரையரங்குகளில் ரிலீசாகியுள்ள படம் பைரி. நாகர்கோயிலை மையமாக கொண்டு புறா வளர்ப்பு மற்றும் அதன் பந்தய பின்னணியில் எடுக்கப்பட்டுள்ளது பைரி. அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி தன்னுடைய இயல்பான மற்றும் சிறப்பான கதைக்களத்தால் இந்தப்படத்தின்மூலம் ஏராளமானவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இருந்தாலும் ஏறக்குறைய 120 திரையரங்குகளில் ரிலீஸ் செய்யப்பட்ட பைரி படம், தற்போது இரண்டாவது வாரத்திலேயே 14 திரையரங்குகளில் மட்டுமே திரையிடப்பட்டுள்ளது.

மஞ்சுமெல் பாய்சுக்கு கிடைத்த வரவேற்பு: இந்தப் படத்துடன் ரிலீசான மஞ்சுமெல் பாய்ஸ் படம் பைரி படத்தை டவுன் செய்துவிட்டதாக தற்போது படத்தின் இயக்குநர் ஜான் கிளாடி வருத்தம் தெரிவித்துள்ளார். முன்னதாக பைரி படத்திற்கு தங்களது படக்குழுவினர் சரியாக பிரமோஷன் செய்யாததும் படம் சரியாக ரசிகர்களை ரீச் செய்யாததற்கு காரணம் என்றும் அவர் தனது வருத்தத்தை பகிர்ந்துள்ளார். படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்தவர்களும் அதிகமான கலெக்ஷனை எதிர்பார்த்ததாகவும் ஆனால் படம் சரியாக போகாததற்கு என்ன காரணம் என்பது தெரியவில்லை என்றும் கூறியதாகவும் ஜான் கிளாடி குறிப்பிட்டுள்ளார்.

முன்னணி இயக்குநர்கள் பாராட்டு: படத்தின் ரிலீசுக்கு முன்னதாக ப்ரீ ஷோவில் படத்தினை பார்த்த சேரன்,பாக்யராஜ், லெனின் பாரதி உள்ளிட்ட ஏராளமான இயக்குநர்கள் தனக்கு தொலைபேசி மூலம் பாராட்டுக்களை தெரிவித்ததாகவும் ஸ்கிரீன் பிளே உள்ளிட்டவற்றை அவர்கள் மிகவும் சிறப்பாக உள்ளதாக குறிப்பிட்டதாகவும் தெரிவித்துள்ளார். குறிப்பாக அயோத்தி பட இயக்குநர் மந்திர மூர்த்தி முதல்முதலில் தன்னுடைய படத்தை பார்த்து பாராட்டியது தனக்கு மிகப்பெரிய உத்வேகத்தை கொடுத்ததாகவும் ஆனால் படம் சரியாக போகவில்லை என்பது மிகப்பெரிய வருத்தத்தை கொடுத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

வலியை கொடுத்த கலெக்ஷன்ஸ்: நடிகர் விஜய்யின் படத்தை போல மஞ்சுமெல் பாய்ஸ் படம் தமிழகத்தில் அதிலும் மலையாளத்தில் ரிலீசாகி ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளதை சுட்டிக் காட்டியுள்ளார் ஜான் கிளாடி, தன்னுடைய பைரி படம் ரசிகர்களை எந்தவகையிலும் சோர்வாக்கக்கூடாது என்பதில் தான் உறுதியாக இருந்ததாகவும் இதனால்தான் படத்தை சிறப்பாக டிரிம் செய்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ள அவர், ஆனால் தயாரிப்பாளருக்கு சரியான லாபத்தை தான் ஈட்டிக் கொடுக்காதது தனக்கு மிகப்பெரிய வலியை கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மஞ்சுமல் பாய்ஸ் படத்திற்கு கொடுத்த ஆதரவை தமிழ் படமான பைரிக்கு ரசிகர்கள் கொடுத்திருக்கலாம் என்ற தன்னுடைய ஆதங்கத்தையும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X