»   »  தயாரிப்பில் கலக்கிய சி.வி.குமார் இயக்குநராகத் தேறுவாரா?

தயாரிப்பில் கலக்கிய சி.வி.குமார் இயக்குநராகத் தேறுவாரா?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவின் வெற்றித் தயாரிப்பாளரான சி.வி.குமார் அடுத்ததாக மாயவன் படத்தின் மூலம் இயக்குநர் அவதாரமும் எடுத்திருக்கிறார்.

தனது திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் மூலம் அட்டக்கத்தி, பீட்சா, முண்டாசுப்பட்டி, சூது கவ்வும் மற்றும் இன்று நேற்று உட்பட பல்வேறு வெற்றிப் படங்களைத் தந்தவர் சி.வி.குமார்.

சிறிய பட்ஜெட் படங்களைத் தயாரித்ததன் மூலம் பா.ரஞ்சித், கார்த்திக் சுப்புராஜ், நலன் குமாரசாமி, ராம், ரவிக்குமார் என்று ஏராளமான இயக்குநர்களை தமிழ் சினிமாவிற்கு அறிமுகம் செய்த பெருமையும் இவரையே சேரும்.

இதுநாள்வரை தமிழ் சினிமாவின் வெற்றிகரமான தயாரிப்பாளராக வலம்வந்த சி.வி.குமார், தற்போது மாயவன் திரைப்படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார்.

தெலுங்கு நடிகர் சந்தீப் கிஷன் நாயகனாகவும், லாவண்யா திரிபாதி நாயகியாகவும் நடிக்கும் இப்படத்தில், டேனியல் பாலாஜி முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளார்.

ஜிப்ரான் இசையமைக்க, கே.ஈ.ஞானவேல்ராஜா ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கும் மாயவன் நேற்று பூஜையுடன் தொடங்கியது.

மாயவன் படத்தை இயக்கப்போவது சி.வி.குமார் என்றாலும், இப்படத்திற்கான திரைக்கதை மற்றும் வசனங்களை சூது கவ்வும் நலன் குமாரசாமி எழுதுவது குறிப்பிடத்தக்கது.

வெற்றித் தயாரிப்பாளர் சி.வி.குமார் இயக்கத்தில் தேறுவாரா? பார்க்கலாம்.

English summary
C.V.Kumar's Debut Directorial Film 'Maayavan' Pooja Held Yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil