Don't Miss!
- Automobiles இதுல ஒரு பெயரைதான் வைக்க போறாங்களா... அப்ப இதுக்காவே காரை வாங்கலாம்... அப்படி என்ன பெயர் தெரியுமா?
- News விவிபேட் ஒப்புகை சீட்டுகளை எண்ண கோரிய வழக்கு.. நாளை வரும் இடைக்கால உத்தரவு! இது ஏன் முக்கியம்?
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Sports தோனிக்கு ஒரு பந்துதான்.. சோலியை முடித்த துபே - ருது.. சிஎஸ்கே பேட்டிங்கை கண்டு கலங்கிய லக்னோ
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
“உடைச்ச டிவியை ஒட்ட வச்சு பிக் பாஸ் பார்க்க வேண்டியது தான்”.. மீண்டும் கமலை கலாய்த்த சிவி குமார்
மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமலை கேலி செய்யும் வகையிலான மீம்ஸ் ஒன்றை பதிவிட்டுள்ளார் தயாரிப்பாளர் சி.வி.குமார்.
Recommended Video
சென்னை : மக்களவைத் தேர்தலில் கமலின் கட்சி தோல்வியடைந்ததை கிண்டல் செய்யும் விதமாக மீம்ஸ் ஒன்றை வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சி வி குமார்.
லோக்சபா தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. இதில் தேசிய அளவில் அதிக இடங்களில் வெற்றி பெற்று, மோடி தலைமையிலான பாஜக அரசு மீண்டும் பதவியேற்பது உறுதியாகி விட்டது.
இந்த தேர்தலில் தமிழகத்தில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியும் முதன்முறையாக போட்டியிட்டது. இதில் அக்கட்சி வேட்பாளர்களுக்கு பெரும்பாலான தொகுதிகளில் 3வது மற்றும் 4வது இடங்களே கிடைத்தன.
Oviyava vittaa yaaru: பிக் பாஸ் ஓவியா இப்போ சீனியின் திவ்யா.. ஓவியாவ விட்டா யாரு- விமர்சனம்
|
சி.வி.குமார் கிண்டல்
இந்நிலையில், கமல் கட்சியின் தோல்வியை விமர்சிக்கும் வகையில் சூதுகவ்வும், பீட்ஸா உள்ளிட்ட படங்களின் தயாரிப்பாளரும், மாயவன், கேங்ஸ் ஆப் மெட்ராஸ் உள்ளிட்ட படங்களின் இயக்குனருமான சி.வி.குமார் டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் வடிவேலு படத்துடன், "போ... போ... எல்லாம் முடிஞ்சருச்சு போ ... உடைச்ச டீவிய ஓட்ட வச்சு பிக் பாஸ பாக்கலாம் போ..." என கிண்டலாகத் தெரிவித்துள்ளார்.
டிவியை உடைத்த கமல்
தேர்தல் பிரசாரத்தின் போது கமல் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், பழைய அரசியல்வாதிகளின் பெயர்களை கூறும் போது கோபமாக அங்கிருக்கும் டிவியை கமல் உடைப்பது போன்ற காட்சிகள் இடம் பெற்றிருந்தது. தற்போது அதனைக் கலாய்த்து தான் இப்படி ஒரு பதிவை சி.வி.குமார் வெளியிட்டுள்ளார் எனத் தெரிகிறது.
|
இது முதல்முறையல்ல
கமலை இப்படி மறைமுகமாக சி.வி.குமார் விமர்சிப்பது இது முதல்முறையல்ல. ஏற்கனவே, கமல் கோட்சே பற்றி பேசிய போதும், இதே போன்ற ஒரு பதிவை அவர் வெளியிட்டிருந்தார். அதில் அவர், ‘அறிவாளி போல் காட்டிகொண்டாலும் அவரும் அரசியல்வாதி தானே ... ஓட்டுண்ணா எல்லாம் அப்படி தான் விட்டுட்டு வேலையை பாருங்கப்பா....' எனத் தெரிவித்திருந்தார்.
ரசிகர்கள் கோபம்
தொடர்ந்து கமல் குறித்து இத்தகைய பதிவுகளை வெளியிடுவதால், அவரின் ரசிகர்களின் கோபத்திற்கு ஆளாகியுள்ளார் சி.வி.குமார். டிவிட்டரில் கமல் பற்றிய சி.வி.குமாரின் பதிவுகளுக்கு கமல் ரசிகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர். சில கமெண்ட்கள் மிகவும் காட்டமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.