twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    இந்தியா தான் எங்க ஆளுங்க.. இது தான் எங்க நாடு.. நீங்க லூசா.. சிஏஏ பிரச்சனையை பேசுகிறதா ஜிப்ஸி?

    |

    சென்னை: இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் ஜீவா, நடாஷா சிங் நடிப்பில் உருவாகி உள்ள ஜிப்ஸி படத்தின் புரட்சிகரமான டீசர் தற்போது வெளியாகி உள்ளது.

    குக்கூ, ஜோக்கர் படங்களை தொடர்ந்து, இயக்குநர் ராஜு முருகன் ஜிப்ஸி படத்தை இயக்கி உள்ளார். அரசியல், கம்யூனிசம், காதல், டிராவல் என ஜிப்ஸி பல பரிமாணங்களில் பயணிக்கிறது.

    ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை, நடிகர் சூர்யா இந்த டீசரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

    எப்போ ரிலீஸ்

    எப்போ ரிலீஸ்

    ஜீவா நடிப்பில் உருவாகி உள்ள ஜிப்ஸி படம், கடந்த ஆண்டே ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இந்த படத்தில் இடம்பெற்றுள்ள அரசியல் நெடி காரணமாக பல முறை சென்சார் செய்யப்பட்டுள்ளது. வரும் மார்ச் 6ம் தேதி ஜிப்ஸி திரைக்கு வருகிறது

    சூர்யா ரிலீஸ்

    குக்கூ, ஜோக்கர் படங்களை இயக்கிய ராஜு முருகன், நடிகர் சிவகுமாரின் பாராட்டுக்களையும் அன்பையும் பெற்றவர். இயக்குநர் பாலாவை விட, இவன் பெரிய ஆளா வருவான் என பல மேடைகளில் கூறியுள்ளார். இந்நிலையில், ராஜு முருகன் இயக்கத்தில் உருவாகி உள்ள ஜிப்ஸி படத்தின் ரிலீஸ் டீசரை நடிகர் சூர்யா வெளியிட்டுள்ளார்.

    முழுக்க அரசியல்

    ஜிப்ஸி படத்தின் பல காட்சிகளை சென்சார் போர்டு வெட்டியதாக செய்திகள் வெளியாகின. மேலும், படத்தின் சில காட்சிகளை மொத்தமாக நீக்கி விட்டு ரீஷூட் செய்துள்ளதாகவும் தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்நிலையில், தற்போது வெளியாகி உள்ள ஜிப்ஸி டீசரிலும் முழுக்க அரசியல் கருத்துக்கள் தான் நிறைந்திருக்கிறது.

    சிஏஏ பிரச்சனை

    சிஏஏ பிரச்சனை

    குடியுரிமை திருத்த சட்ட மசோதா விவகாரம் நாடு முழுக்க எதிரொலித்து வரும் நிலையில், ஜிப்ஸி படத்தில், அதுகுறித்த அழுத்தமான வசனங்கள் இடம் பெற்றுள்ளன. டிசரின் ஒரு காட்சியில், முஸ்லீம் பெண்ணான நாயகி, இந்தியா தான் எங்க ஆளுங்க.. இது தான் எங்க நாடு.. நீங்க எல்லாம் லூசா என பேசும் வசனம் நிச்சயம் அதிர்வலைகளை உண்டாக்கும் என்றே தெரிகிறது.

    மனிதம் தாண்டி புனிதமில்லை

    மனிதம் தாண்டி புனிதமில்லை

    இனமென பிரிந்தது போதும், மதமென பிரிந்தது போதும் மனிதம் மட்டும் தீர்வாகும் என கோமாளி படத்தில் வரும் பாடல் வரிகளை போல, எத்தனை பேர், சாதி, மத பெயரால் சண்டை போடக் கூடாது என்று எவ்வளவு சொன்னாலும், அரசியல் அதனை சுற்றியே நகர்வதால், அந்த பிரச்சனைகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. மனிதம் தாண்டி புனிதமில்லை என சூர்யா தனது ட்வீட்டிலும் அதே கருத்தை முன் வைத்துள்ளார்.

    English summary
    After Kuckoo and Joker, director Raju Murugan come with a strong social political issue in Gypsy. Now the release teaser released by actor Suriya goes viral.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X