twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சல்மான் கானின் தபங் 3 படத்துக்கு வந்த இப்படியொரு சிக்கல்.. என்ன செய்யப் போகிறது படக்குழு?

    |

    மும்பை: பிரபுதேவா இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவாகியுள்ள தபங் 3 படம் நாளை வெளியாகிறது.

    தபங் படத்தின் முதல் இரு பாகங்கள் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் அடித்த நிலையில், தபங் 3 படம் இன்னும் மிகப்பெரிய வசூல் சாதனையை பாக்ஸ் ஆஃபிஸில் படைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால், தற்போது நாடு முழுவதும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராடி வருவதால், தபங் 3 படத்தின் வசூல் பாதிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

    தப்பான டைம்

    தப்பான டைம்

    குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் வெடித்து வருகின்றன. அதுவும் வட இந்தியாவில் தான் இந்த போராட்டத்தின் தாக்கம் அதிகமாக உள்ளது. இந்நிலையில், சல்மான் கானின் தபங் 3 நாளை வெளியாவது தப்பான டைமில் படத்தை ரிலீஸ் செய்வதற்கு சமமாக கருதப்படுகிறது.

    சைலன்ட் சல்மான்

    சைலன்ட் சல்மான்

    மாணவர்களின் போராட்டத்திற்கு பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பல பிரபலங்கள் குரல் கொடுத்து வரும் நிலையில், பாலிவுட்டின் முன்னணி ஹீரோவான சல்மான் கான் இந்த விஷயத்தில் சைலன்ட்டாக இருந்து வருகிறார்.

    பாய்காட் பாலிவுட்

    பாய்காட் பாலிவுட்

    சல்மான் கான் மட்டுமின்றி, அமிதாப் பச்சன், ஆமீர்கான், ஷாருக்கான், அக்‌ஷய குமார் என எந்தவொரு ரீல் ஹீரோவும் இந்த நேரத்தில் மாணவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுக்காதது பாலிவுட் ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷேம் ஆன் பாலிவுட் மற்றும் பாய்காட் பாலிவுட் போன்ற ஹாஷ்டேக்குகளை உருவாக்கி தங்களது கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

    வசூல் பாதிக்கும்

    வசூல் பாதிக்கும்

    சல்மான் கானின் தபங் 3 திரைப்படம் நாளை உலகம் முழுவதும் வெளியாகிறது. சல்மான் கானுக்கு பாலிவுட்டில் அதிகளவில் ரசிகர்கள் இருந்தாலும், இதுபோன்ற சூழலில் மக்கள் ஜாலியாக தியேட்டருக்கு சென்று படம் பார்க்க மாட்டார்கள் என்றும், இளைஞர்கள் தியேட்டருக்கு வரவில்லை என்றால் நிச்சயம் வசூல் பாதிக்கும் எனவும் தெரிகிறது.

    பிரஸ் ஷோ கேன்சல்

    பிரஸ் ஷோ கேன்சல்

    மேலும், சல்மான் கானின் தபங் 3 படத்தின் பிரஸ் ஷோ இன்று திரையிடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பிரச்சனையால், அதுவும் இன்று கேன்சல் செய்யப்பட்டுள்ளது.

    தீபிகா நிகழ்ச்சியும் கேன்சல்

    தீபிகா நிகழ்ச்சியும் கேன்சல்

    பரிணித்தி சோப்ரா, பிரியங்கா சோப்ரா, ஹூமா குரேஷி உள்ளிட்ட பல நடிகைகள் இந்த சம்பவத்திற்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர். ஆனால், தீபிகா படுகோன், வரும் ஜனவரி 10ம் தேதி வெளியாகவுள்ள சபாக் படத்தின் புரொமோஷனுக்காக சுற்றி வருகிறார். குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தற்போது போராட்டங்கள் நடைபெற்று வருவதால், டெல்லியில் நடைபெறவிருந்த சபாக் புரொமோஷன் நிகழ்ச்சியை படக்குழுவினர் ரத்து செய்துள்ளனர்.

    English summary
    Citizenship Amendment Act 2019 protests taking place across the country, the law and order situation may cut the footfalls coming to theatres this weekend.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X