twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    டிரெண்டாகும் ’ஷேம் ஆன் பாலிவுட்’.. மெளனம் காக்கும் அமிதாப் பச்சன் மற்றும் கான் நடிகர்கள்?

    |

    மும்பை: குடியுரிமை திருத்த மசோதாவுக்கு எதிராக ஜாமியா பல்கலைக் கழக மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை வெடித்தது. ஜாமியா பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஆதரவாக ஜே.என்.யூ., பல்கலைக் கழக மாணவர்களும் போராட்டத்தில் குதித்தனர். போராட்டக்காரர்களை கட்டுப்படுத்த போலீசார் தடியடி, கண்ணீர் புகை மற்றும் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.

    துப்பாக்கிச்சூட்டில் பல மாணவர்களுக்கு காயம் ஏற்பட இந்த பிரச்சனை விஸ்வரூபம் எடுத்தது. மாணவர்களுக்கு எதிராக போலீசார் செயல்படுவதாகவும், இதுகுறித்து பாலிவுட் நடிகர்கள் வாய் திறக்காமல் மெளனம் சாதித்து வருகிறார்கள் என #ShameonBollywood என்ற ஹாஷ்டேக் உருவாக்கப்பட்டு பாலிவுட் பிரபலங்களை நெட்டிசன்கள் கேள்வி கேட்டு வருகின்றனர்.

    பாலிவுட்டின் முன்னணி நட்சத்திரங்களான அமிதாப் பச்சன், அமீர்கான், ஷாருக்கான், சல்மான் கான் மற்றும் அக்‌ஷய் குமார் உள்ளிட்டோர் இந்த பிரச்சனை குறித்து இதுவரை வாய் திறக்காதது ஏன் என்றும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    காசு தான் முக்கியம்

    பாலிவுட்டின் மூன்று கான் நடிகர்களான அமீர்கான், சல்மான் கான் மற்றும் ஷாருக்கான் மாணவர்களுக்கு எதிராக நடந்த இந்த சம்பவம் குறித்து இதுவரை வாய் திறக்காத நிலையில், இந்த பிரபல பாலிவுட் நடிகர்களுக்கு காசு தான் முக்கியம். மக்களின் நலனில் அக்கறை இல்லை என பல நெட்டிசன்கள் Shame on Bollywood என்ற ஹாஷ்டேக்கில் திட்டித் தீர்த்து வருகின்றனர்.

    வெட்கமே இல்லாமல் பயோபிக் பண்ணுவாங்க

    குடியுரிமை திருத்த சட்ட மசோதாவிற்கு எதிராக போராடி வரும் பெண்கள் குறித்த பயோபிக்கில் நடிகைகள் தீபிகா படுகோன் மற்றும் கங்கனா ரனாவத் உள்ளிட்டோர் நடிப்பார்கள். அப்போது தான் இதுகுறித்து அவர்கள் புரொமோஷனுக்காக வாய் திறப்பார்கள் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

    நல்லா நடிக்கிறாங்க

    பாலிவுட் நடிகர்கள் மக்களுக்காகவும் மாணவர்களுக்காகவும் இந்த நேரத்திலும் குரல் கொடுக்காமல், தாங்கள் சிறந்த நடிகர்கள் என்பதை நல்லா நடித்து காட்டுறாங்க என இந்த நெட்டிசன் கிண்டல் செய்துள்ளார்.

    நிறைய கோடிகளை சம்பாதிக்கலாம்

    இந்த நிகழ்வுகளின் மூலம், சத்யமேவ ஜெயதே நிகழ்ச்சியின் அடுத்த எபிசோடுகளை நடத்தி இன்னும் நிறைய கோடிகளை சம்பாதிக்கலாம் அமீர்கான் என இந்த நெட்டிசன் கமெண்ட் செய்துள்ளார்.

    பாய்காட் பாலிவுட்

    ஷேம் ஆன் பாலிவுட்டை தொடர்ந்து #BoycottBollywood-ம் டிரெண்டாகி வருகிறது. மாணவர்களுக்காக குரல் கொடுக்காமல் இருக்கும் முன்னணி நட்சத்திரங்களை தொடர்ந்து கேள்வி கேட்டு வருகின்றனர். பாலிவுட் படங்களில் மட்டும் தான் முன்னணி நட்சத்திரங்கள் மக்களுக்காக போராடுவார்கள். நிஜத்தில் யாரும் வர மாட்டார்கள் என பலரும் பாலிவுட் நட்சத்திரங்களை ட்ரோல் செய்து வருகின்றனர்.

    English summary
    With student protests raging across India against the Citizenship Amendment Act, hashtag #ShameonBollywood started trending on Twitter with netizens questing the silence of many A-listed celebrities over the issue.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X