என்னை காரில் இருந்து வெளியே இழுத்து மிரட்டினார்: கேப் டிரைவர் மீது சீரியல் நடிகை புகார்
கொல்கத்தா: கொல்கத்தாவில் தொலைக்காட்சி நடிகையை காரில் இருந்து வெளியே இழுத்து மிரட்டியுள்ளார் உபேர் கேப் டிரைவர் ஜம்ஷெத்.
மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்தவர் ஸ்வஸ்திகா தத்தா. பெங்காளி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருகிறார். அவர் இன்று காலை சீரியல் ஷூட்டிங்கிற்கு கேபில் சென்றுள்ளார்.

உபேர் கேபில் சென்ற அவருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,
இது போன்று இதுவரை எனக்கு நடந்தது இல்லை. நான் பல முறை உபேர் கேபை புக் செய்திருக்கிறேன். ஆனால் இம்முறை நடந்த சம்பவத்தால் பேரதிர்ச்சி அடைந்தேன். ஷூட்டிங்கில் கலந்து கொள்ள என் வீட்டில் இருந்து ஸ்டுடியோவுக்கு செல்ல இன்று காலை 8.15 மணிக்கு நான் உபேர் கேபை புக் செய்தேன்.
ஜம்ஷெத் என்பவர் காரை ஓட்டினார். என் வீட்டில் இருந்து கிளம்பிய வேகத்தில் நடுரோட்டில் என் ட்ரிப்பை கேன்சல் செய்துவிட்டு என்னை வாகனத்தில் இருந்து வெளியேறுமாறு கூறினார். நான் காரில் இருந்து இறங்க மறுத்தேன். உடனே அவர் காரை வேறு திசையில் ஓட்டி அவர் வசிக்கும் பகுதிக்கு சென்றார்.
என்னை திட்டி காரில் இருந்து கீழே இறங்கச் சொன்னார். நான் மறுத்ததும் என்னை வெளியே இழுத்தார். எனக்கு கோபம் வந்தது. நான் உதவி கேட்டு கத்தியதும் அவர் என்னை மிரட்டினார். அவருக்கு தெரிந்த ஆட்களை அழைத்தார். எனக்கு ஷூட்டிங்கிற்கு நேரமானதால் நான் கிளம்பிச் சென்றுவிட்டேன். இது குறித்து என் தந்தையிடம் கூறினேன். நிச்சயம் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்.
இந்த சம்பவம் தேவ்தாஸ் உணவகத்திற்கு முன்பு காலை 8.15 மணி முதல் 8.45 மணி வரை நடந்தது. இந்த சம்பவத்தால் நான் இன்னும் அதிர்ச்சியில் உள்ளேன். இது போன்று இதுவரை நடந்தது இல்லை.
உபேர் டிரைவரின் எண்: 3340585389
இவ்வாறு ஸ்வஸ்திகா தத்தா ஃபேஸ்புக்கில் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ஸ்வஸ்திகா தத்தா போலீசில் புகார் அளித்தார். அவரின் புகாரின்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் உபேர் டிரைவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications