Just In
- 9 hrs ago
தளபதி65 படத்தில் நடிக்கிறேனா? அது நடந்தா உங்களுக்கு ட்ரீட் வைக்கிறேன்… பவித்ரா லட்சுமி பதில் !
- 9 hrs ago
அதிகரிக்கும் கொரோனா...பொன்னியின் செல்வன் சூட்டிங்கில் மாற்றம் செய்த மணிரத்னம்
- 10 hrs ago
விஜய் கையெழுத்திட்ட துண்டுச்சீட்டு...பொக்கிஷமாக பதிவிட்ட அமெரிக்க ரசிகர்
- 10 hrs ago
இப்படியா செய்வார் பிரசாந்த்...சமூக வலைதளமே அலறுதே
Don't Miss!
- Lifestyle
இன்றைய ராசிப்பலன் 14.04.2021: இன்று இந்த ராசிக்காரர்களுக்கு பழைய கடனால் தொல்லை அதிகரிக்கும்…
- News
புதுவையில் ரெம்டெசிவிர் மருந்து தட்டுப்பாடு.. விமானம் மூலம் கொண்டு வந்து உதவிய தமிழிசை!
- Sports
ரோகித் பத்தி மோசமான கமெண்ட்... பதிவை உடனடியாக நீக்கிய ஸ்விகி... குவியும் எதிர்ப்பு
- Automobiles
ஆட்டோமேட்டிக் காராகவும் தயாராகும் 2021 மஹிந்திரா ஸ்கார்பியோ!! சன்ரூஃப்-ஐயும் பெற்று வருகிறது...
- Finance
இந்திய பொருளாதாரம் 2021ல் 12.5 சதவீத வளர்ச்சி அடையும்..!
- Education
பி.இ, பி.டெக் பட்டதாரியா நீங்க? ரூ.35 ஆயிரம் ஊதியத்தில் மத்திய நிறுவனத்தில் பணியாற்றலாம் வாங்க!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்ற விஜய் சேதுபதி.. படப்பிடிப்பில் கேக் வெட்டி கொண்டாட்டம்!
சென்னை: சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதை வென்ற நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோ வைரலாகி வருகிறது.
2019ஆம் ஆண்டுக்கான நாட்டின் 67வது தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. இதில் தமிழ் சினிமா 7 தேசிய விருதுகளை குவித்துள்ளது.
சிறந்த தமிழ் படமாக அசுரன் படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. சிறந்த இசையமைப்பாளராக டி இமான் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

சிறந்த துணை நடிகர்
சிறந்த நடிகருக்கான விருதுக்கு நடிகர் தனுஷும், சிறந்த துணை நடிகருக்கான விருதுக்கு நடிகர் விஜய்சேதுபதியும் அறிவிக்கப்பட்டுள்ளனர். நடிகர் தனுஷ் அசுரன் படத்திற்காகவும் நடிகர் விஜய் சேதுபதி சூப்பர் டீலக்ஸ் படத்திற்காகவும் தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

ஷில்பா கேரக்டர்
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதி ஷில்பா என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். இந்த கதாப்பாத்திரத்திற்காக தான் தேசிய விருதுக்கு தேர்வாகியிருக்கிறார் விஜய் சேதுபதி. விருது அறிவிக்கப்பட்டவுடன் அப்படத்தின் இயக்குநரான தியாகராஜன் குமாரராஜாவுக்கு விஜய் சேதுபதி டிவிட்டரில் நன்றி கூறியுள்ளார்.
|
கேக் வெட்டி கொண்டாட்டம்
தேசிய விருது பெற்றுள்ள பிரபலங்களுக்கு சக திரைத்துறை நட்சத்திரங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் சேதுபதி படப்பிடிப்பு தளத்தில் கேக் வெட்டி கொண்டாடியுள்ளார்.
|
வைரலாகும் வீடியோ
விஜய் சேதுபதி சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பில் இருந்த விஜய் சேதுபதி கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனிடையே விஜய் சேதுபதி தனக்கு வாழ்த்து தெரிவித்த அத்தனை பிரபலங்களின் டிவிட்டுகளையும் ரீடிவிட் செய்துள்ளார்.