கேக் மிக்ஸிங்கில் கலக்கிய கணேஷ் வெங்கட்ராமன்.. மாடல் ஸ்வேதா!
சென்னை: சென்னையில் கேக் சீசன் தொடங்கி விட்டது. கிறிஸ்துமஸ் வருகிறது, அதைத் தொடர்ந்து ஆங்கிலப் புத்தாண்டு வருகிறது. எனவே கேக் தயாரிப்பில் பலரும் தீவிரமாகியுள்ளனர்.
அந்த வகையில் சென்னை கிண்டியில் உள்ள பிரபல நட்சத்திர ஹோட்டலான லீ மெரீடியன் ஹோட்டலிலும் கேக் மிக்ஸிங் திருவிழா நேற்று நடத்தப்பட்டது.
வழக்கம் போல இந்த முறையும் பல்துறைப் பிரபலங்கள் இந்த கேக் மிக்ஸிங்கில் கலந்து கொண்டு தங்களது கைவரிசையைக் காட்டினர்.

அரேபியன் டேட்ஸ்:
அரேபியன் டேட்ஸ் கேக் இந்த ஹோட்டலில் பிரபலமாகும். அந்த கேக்குக்கான மிக்ஸிங்கும் நேற்று நடத்தப்பட்டது.

அல்மான்ட் கேக்:
இன்னொரு பிரபல கேக் அல்மான்ட் கேக் ஆகும். அதேபோல அப்ரிகாட்ஸ், வால்நட், பிளம், பிக், முந்திரி, டிரை கிரேப்ஸ்,, பிஸ்டாச்சியோ கேக்குகளுக்கான மிக்ஸிங்கும் நேற்று நடந்தது.

கணேஷ் வெங்கட்ராமன்:
பிரபல நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கேக் மிக்ஸிங்கில் கலந்து கொண்ட பிரபலங்களில் ஒருவர் ஆவார். மிமிக்ரி கலைஞர் படவா கோபி தனது மனைவியுடன் வந்து கைவரிசையைக் காட்டினார்.

மாடல் ஸ்வேதா:
மாடல் அழகி ஸ்வேதாவும் வந்திருந்து மிக்ஸிங்கைச் சிறப்பித்தார்.

45 நாள் தயாரிப்பு:
கேக்குகளுக்கான அனைத்துப் பொருட்களையும் மிக்ஸ் செய்து அதை 45 நாள் ரம், வோத்கா, காக்னாக் ஆகியவற்றில் ஊற வைத்து பின்னர் கேக்கை தயாரிப்பார்கள்.


Click it and Unblock the Notifications











