டாப் ஹீரோ நடிக்க.. சினிமாவாகிறது கேரள விமான விபத்து சம்பவம்.. கிராபிக்ஸில் அதை பண்ணப் போறாங்களாம்!

By

சென்னை: கேரள மாநிலம் கரிப்பூர் விமான விபத்து சம்பவத்தை மையமாக வைத்து சினிமா படம் உருவாக இருக்கிறது.

Recommended Video

Survivor Recalls Moments After Kerala Plane Crash | Oneindia Tamil

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு நாடுகள் லாக்டவுனை பிறப்பித்தன. உலகம் முழுவதும் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால் பல நாடுகளுக்கு வேலைக்காக, படிப்புக்காகச் சென்றவர்கள் சொந்த நாட்டுக்குத் திரும்ப முடியாமல் தவித்தனர்.

வந்தே பாரத் விமானம்

வந்தே பாரத் விமானம்

இந்தியாவில் இருந்து அவர்களை மீட்க சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டன. பல்வேறு நாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்கள், 'வந்தே பாரத்' என்ற சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்டனர். இந்நிலையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் துபாயில் இருந்து ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் ஒன்று, கேரள மாநிலம் கோழிக்கோடுக்கு கடந்த 7 ஆம் தேதி வந்தது.

விமானம் உடைந்தது

விமானம் உடைந்தது

கோழிக்கோடு கரிப்பூர் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்போது எதிர்பாராத விதமாக விபத்தில் சிக்கியது. இதில் விமானம் இரண்டாக உடைந்தது. இந்த விபத்தில் 2 விமானிகள் உள்பட 18 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். அவர்கள் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் நகர மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

கேலிகட் எக்ஸ்பிரஸ்

கேலிகட் எக்ஸ்பிரஸ்

இந்த விமான விபத்து, இந்தியா முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் இந்த விமான விபத்து சம்பவத்தை மையமாக வைத்து கேலிகட் எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் சினிமா உருவாக இருக்கிறது. படத்துக்கு மஜித் மரஞ்சேரி கதை, திரைக்கதை எழுதுகிறார். மாயா இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறும்போது, உலகிலுள்ள மிகவும் சிக்கலான விமான நிலையங்களில் கரிப்பூர் சர்வதேச விமான நிலையமும் ஒன்று,

முன்னணி நடிகர்கள்

முன்னணி நடிகர்கள்

சமீபத்தில் நடந்த விபத்தில், கொரோனா பற்றி கவலைப்படாமல், அரசுடன் இணைந்து பொதுமக்களும் மீட்பு பணியில் ஈடுபட்டது கவனத்தை ஈர்த்தது. இதை மையமாக வைத்து கதையை உருவாக்குகிறேன். விபத்தில் இருந்து தப்பிய ஒரு குடும்பத்தின் பார்வையில் இருந்து திரைக்கதை உருவாக்கப்படுகிறது. முன்னணி நடிகர்களிடம் பேசி வருகிறோம். விமான விபத்து காட்சிகளை கிராபிக்ஸில் உருவாக்க இருக்கிறோம்' என்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X