twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கலிபோர்னியாவில் காட்டுத்தீ.. அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்த அர்னால்டு!

    கலிபோர்னியாவில் ஏற்பட்டுள்ள பயங்கர காட்டுத்தீயால், நடிகர் அர்னால்ட் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்கள் தீயணைப்பு வீரர்களின் உதவியால் பாதுகாப்பான இடத்திற்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.

    |

    கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.

    நேற்று இரவு பரவிய காட்டுத்தீ காரணமாக, கலிபோர்னியா, லாஸ் ஏஞ்சல்ஸ் உள்ள பகுதிகளில் இருந்த பல வீடுகள் தீக்கிரையாகின.

    பிரபல ஹாலிவுட் நடிகர் அர்னால்டு, தீயணைப்பு வீரர்களால் பத்திரமாக மீட்கப்பட்டு, பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்.

    நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் எகிப்து நாட்டில் நாளை ரிலீசாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.நடிகர் விஜய்யின் பிகில் திரைப்படம் எகிப்து நாட்டில் நாளை ரிலீசாகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    காட்டுத்தீ

    காட்டுத்தீ

    அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் திடீரென ஏற்பட்ட காட்டுத்தீயால், பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகளில் உள்ள மக்கள், தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு, வேறு இடத்திற்கு உடனடியாக மாற வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. லாஸ் ஏஞ்சல்சில் உள்ள பல பிரபலங்களின் வீடுகளும் தீக்கிரையாகி வருகின்றன. காட்டுத்தீயை அணைக்க பல முயற்சிகளை அரசு கையாண்டு வருகிறது.

    சொகுசு வீடுகள்

    சொகுசு வீடுகள்

    இந்த காட்டுத்தீக்கு பல பிரபலங்களின் சொகுசு வீடுகள் தீக்கிரையாகி வருகின்றன. பிரபல கூடைப்பந்து வீரர் லேப்ரான் ஜேம்ஸின் 23 மில்லியன் டாலர் வீடு தீக்கிரையாகி சாம்பலானதை கண்ட, லேப்ரான் ஜேம்ஸ், மிகுந்த துயரத்துடன், இந்த லாஸ் ஏஞ்சல்ஸ் காட்டுத்தீயை சாதாரணமாக எண்ணாதீர்கள் என ட்வீட் போட்டுள்ளார்.

    அர்னால்டு சேஃப்

    அர்னால்டு சேஃப்

    நேற்று நள்ளிரவு முதல் காட்டூத்தி பரவி வரும் நிலையில், அதிகாலை 3.30 மணிக்கு, திறமையான இரண்டு தீயணைப்பு வீரர்களால் பிரபல ஹாலிவுட் நடிகரும் முன்னாள் கலிபோர்னிய மாகாண கவர்னருமான அர்னால்டு காப்பாற்றபட்டுள்ளார். இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ள அர்னால்டு, அவர்கள் தான் ரியல் ஹீரோக்கள் என பாராட்டியுள்ளார்.

    ஹாலிவுட் நடிகர்கள்

    ஹாலிவுட் நடிகர்கள்

    நடிகர் அர்னால்டு காப்பாற்ற பட்ட நிலையில், அவரைப் போலவே ஹாலிவுட் நடிகர்கள் க்ளார்க் கெர்க், கர்ட் சட்டர் ஆகியோர் காப்பாற்றப்பட்டுள்ளனர். ஆனால், அவர்களின் வீடுகள் தீக்கிரையாகி உள்ளதால், தங்க இடம் இன்றி தவித்து வருவதாக சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர்.

    பொதுமக்கள்

    இவர்களை போலவே பல பொதுமக்களும் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீக்கு ஆளாகி வீடு வாசல் இன்றி அலைந்து வருகின்றனர். அரசு உருவாக்கியுள்ள பாதுகாப்பு முகாம்களில் பல பேர் தஞ்சம் அடைந்துள்ளனர்.

    டெர்மினேட்டர் ப்ரீமியர் ரத்து

    டெர்மினேட்டர் ப்ரீமியர் ரத்து

    அர்னால்டு மற்றும் லிண்டா ஹாமில்டன் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படத்தின் ப்ரீமியர் காட்சி, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் பரவி வரும் காட்டுத்தீ காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நிலைமை சீரான பிறகே டெர்மினேட்டர்: டார்க் ஃபேட் படத்தின் ப்ரீமியர் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    English summary
    The premiere of Arnold Schwarzenegger and Linda Hamilton’s Terminator: Dark Fate has been cancelled due to wildfire in California.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X