CM விஜய்யை இனிமேல் அப்படிக் கூப்பிடுங்க.. ஜேம்ஸ் வசந்தன் பாய்ண்ட் பிடிச்சு விளாசுறாரே!
சென்னை: முதலமைச்சர் விஜய் குறித்து இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் தனது முகநூல் பக்கத்தில் மிகவும் காட்டமான விமர்சனப் பதிவைப் பகிர்ந்துள்ளார். அது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், " விஜய் ஒரு பொய்க்காரர் என்பதை அவர் முதல் மாநாட்டுப் பேச்சைக் கேட்டதிலிருந்தே சொல்லிவருகிறேன். அதுவரை அவரை ஒரு மாற்று சக்தியாக எதிர்பார்த்திருந்த எனக்கு அவர் ஏமாற்றுக்காரர் என்பது வெட்டவெளிச்சமாகத் தெரிந்தது.
மிகைப்படுத்தலை விட்டுவிடலாம்; அது மனித இயல்பு. அதுவும் அரசியல் தளத்தில் அதைக் குற்றமாகக் கருதவேண்டியதில்லை. ஆனால் பொய்கள் எதிர்க்கப்பட வேண்டிய ஒன்று. அன்றைய அரசைப் பற்றி அவர் பேசிய எல்லாமே பொய்கள்தான். அந்தப் பொய்களை உண்மைபோல பேசி அவருடைய ரசிகர்களை நம்பவைத்ததுதான் அவருடைய ஒரே முதலீடு.
1. பெண்களுக்கெதிரான குற்றங்கள்.
- குழந்தைகள், பெண்கள், பெரியவர்கள் என எந்தப் பெண்ணுக்கும் பாதுகாப்பே இல்லை திமுக ஆட்சியில் என்றார். உங்களால் இயலவில்லை என்றால் என்னிடம் விடுங்கள் என்றார்.
- இவர் ஆட்சியில் 15 நாட்களில்: 42 கொலைகள், 74 பாலியல் வன்கொடுமைகள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இவற்றில் பாதி குற்றவாளிகள் தவெகவினர் என்பதுதான் கவனிக்க வேண்டிய தகவல்.

- "கல்வித்தரம் சரியில்லை, இதில் 'கல்வியில் சிறந்த தமிழ்நாடு' என்று drama போடுகிறார்கள்" என்று சினத்துடன் கத்தினார்.
- டெல்லி கூட்டத்தில் பெண்களின் கல்வி, சுகாதாரம், பாதுகாப்பில் தமிழ்நாடு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை எட்டியுள்ளது என்ற தகவலைப் பகிர்ந்தார்.
3. 10 லட்சம் கோடி ரூபாய் கடன்காரத் தமிழகம்
- தமிழ்நாடு 10 லட்சம் கோடி ரூபாய் கடன் வாங்கி பொருளாதாரத்தில் தத்தளிக்கிறது என்று பொருளாதாரம் தெரிந்த நிபுணர் போல ஒப்பித்தார்.
- இந்தியாவின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாகத் திகழும் தமிழகம், தனது உறுதித்தன்மையையும் தொடர் வளர்ச்சியையும் வெளிப்படுத்தி வருகிறது என்று டெல்லியில் அறிக்கையிட்டார்.
4. திமுக தீய கட்சி, தவெக தூய கட்சி
- திமுக ஊழல் செய்கிறது, நான் தூய ஆட்சி கொடுப்பேன் என்று வாக்குறுதி கொடுத்தார்.
- ஊழலோடுதான் ஆட்சியமைக்கவே செய்தார். ஒவ்வொரு தலைவருக்கும் ஒரு சோஃபா வழங்கினார். இன்று அவர் ஆட்சி அமைந்திருப்பதே ஊழலின் அடித்தளத்தில்தான்.
- சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் (CMDA) துறையில் வெறும் 3 நாட்களில் 130 திட்ட வரைபடக் கோப்புகளுக்கு (Building Approvals) அனுமதி வழங்கப்பட்டதாகவும், அதற்காக சுமார் ₹100 கோடி வரை மாமூல் அல்லது லஞ்சம் கைமாறியதாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
5. ஏராளமான வாக்குறுதிகளை அள்ளித் தெளித்தார். அவற்றின் நடைமுறைப் பிரச்சனைகள் தெரியவந்தவுடன் எதையும் செய்யமுடியாமல் ஓடி ஒளிந்தார். கால அவகாசம் கேட்டிருக்கிறார்.

- மின்கட்டணக் குறைப்பு
- மகளிர் உரிமைத் தொகை
- பட்டதாரிகள் உதவித் தொகை
- விவசாயக் கடன் தள்ளுபடி
*இந்திய அரசியலிலேயே சோஃபா வழங்கி ஆட்சியமைத்த முதல் முதல்வர் என்கிற சாதனைப் பட்டத்தைப் பெற்ற இவரை இனிமேல் Sofa CM என்று பெருமையுடன் அழைக்கலாம். " என்று பதிவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications