Just In
- 19 min ago
கல்லடி வரும்னு நினைச்சேன்.. ஆனா அன்பு அடிதான் வந்திருக்கு.. பிக்பாஸ் குறித்து மனம் திறந்த பாலாஜி!
- 1 hr ago
பின்னாடி என்னம்மா பேலன்ஸ் பண்றாங்க.. வேற லெவல் ஸ்குவாட் போடும் ரகுல் ப்ரீத் சிங்.. வைரல் வீடியோ!
- 1 hr ago
வில்லனுடன் காதல்.. 14 வயது வித்தியாசம்.. காதல் என்ன வயசு பார்த்தா வருது? பிரபல நடிகை கேள்வி!
- 2 hrs ago
கணவருக்கு பிறந்த நாள்.. கட்டியணைத்து முத்தம் கொடுத்த குஷ்பு.. வைரலாகும் போட்டோஸ்!
Don't Miss!
- Finance
மாத சம்பளக்காரர்களுக்கு ஜாக்பாட்.. வரி பலகை எண்ணிக்கை குறைக்க அதிக வாய்ப்பு..!
- Automobiles
நாடு திரும்பிய கையோடு சொகுசு காரை வாங்கிய பிரபல கிரிக்கெட் வீரர்... அவர் யார்னு தெரிஞ்சா மெர்சலாயிடுவீங்க!!
- News
மேற்கு வங்கத்தில் மேலும் ஒரு அமைச்சர் ராஜினாமா -ஆட்டம் காணும் மம்தா அமைச்சரவை
- Sports
ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்துல தடையெல்லாத்தையும் கடந்துருக்காரு... சிராஜ் குறித்து கோச் பெருமிதம்
- Lifestyle
சுவையான... பன்னீர் போண்டா
- Education
பட்டதாரி இளைஞர்களுக்கு சூப்பர் வாய்ப்பு! ரூ.1.75 லட்சம் ஊதியத்தில் அரசாங்க வேலை!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
காலர் கேட்ட அதிரடி கேள்வி.. அசத்தல் பதில் சொன்ன ஆரி.. வேற லெவல் ப்ரோமோ!
சென்னை: பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய எபிசோடுக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சியின் நேற்றைய எபிசோடிலேயே ஆரி காப்பாற்றப்பட்டு விட்டார். ஏற்கனவே ஆரி எப்படி முதல் நாளே காப்பாற்றப்படுகிறார் என்று மண்டைக் காய்ந்து வருகின்றனர் ஹவுஸ்மேட்ஸ்.
கடந்த வாரம் இரண்டாவது நபராய் சேவ் செய்யப்பட்ட நிலையில் இந்த வாரம் முதல் நபராய் காப்பாற்றப்பட்டது ஹவுஸ்மேட்ஸ்களுக்கு சற்று அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது சாதாரண நடிப்பு இல்லடா சாமி.. கேலக்ஸி லெவல் நடிப்பு.. ரம்யாவை கழுவி ஊற்றிய பிரபல நடிகர்!

முதல் ப்ரோமோ
இதனை ரம்யாவிடம் கேள்வியாக கேட்டே விட்டார் ஆஜித். இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான முதல் ப்ரோமோ வில் பிக்பாஸ் மேடையில் தோன்றிய ஜெயம் ரவி ஹவுஸ்மேட்டுஸ்களுடன் உரையாற்றினார்.

அந்நியன் அம்பி
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் இரண்டாவது புரமோ வெளியோகியுள்ளது. இதில் காலர் ஒருவர் ஆரியிடம் கேள்வி கேட்டுள்ளார். ஆரியிடம் பேசும் அந்த காலர், அந்நியன் படத்தில் அம்பி என்ற நல்ல கேரக்டர் வரும். ஆனால் அந்த கேரக்டரை யாருமே விரும்ப மாட்டார்கள்.

இணக்கமான சூழல பாதிக்காதா?
ஏன்னா அவரு எல்லாத்துக்கும் ரூல்ஸ் ரெகுலேஷன்னு பேசிக்கிட்டே இருப்பாரு. இங்க பிக்பாஸ் வீட்டுல எல்லா ஹவுஸ்மேட்ஸும் சராசரி மனுஷங்களா உலா வரும் போது இணக்கமான சூழல் உங்களுக்கு பாதிக்காதா? அதை ஏன் தொடறீங்க? என்று கேட்கிறார்.

இணக்கம் பண்ண வரல
அதற்கு பதில் சொல்லும் ஆரி, இணக்கம் பண்ணிக்கிறதுக்காக நான் இந்த பிக்பாஸ் வீட்டுக்குள்ள வரலங்றத, பிக்பாஸ் வீட்டுக்குள்ள வந்த அன்னைக்கே சொல்லிட்டாரு. இந்த வீட்டுல யாரும் நண்பர்களும் கிடையாது, யாரும் எதிரியும் கிடையாதுன்னு.

தகுதிப்படுத்துறதுக்கான கேள்வி
எல்லார்க்கிட்டேயும் நான் கேள்வி கேட்பது, எல்லோர் மீதும் நான் குற்றம் வைப்பதற்காக அல்ல. அவர்களை இன்னும் தகுதிப்படுத்துறதுக்கான கேள்வியாதான் நான் பார்க்கிறேன் என்றார்.

சரியான கேள்வி சரியான பதில்
காலர் ஆரியிடம் கேட்கும் கேள்வியையும் அதற்கு ஆரி சொல்லும் பதிலையும் ஹவுஸ்மேட்ஸ் அனைவரும் உன்னிப்பாக கவனிக்கின்றனர். இதனை பார்த்த ரசிகர்கள் சரியான கேள்வி சரியான பதில் என கூறி வருகின்றனர்.

தனியாய் மீட்டிங் போடுவார்கள்
அதேநேரத்தில் இந்த கேள்வி பதிலுக்கு பிறகு நிச்சயம் இதை வைத்து ஏதாவது ஒரு பிரளயத்தை கிளப்புவார்கள் என்றும் இதையும் தவறாக புரிந்து கொண்டு தனியாய் மீட்டிங் போடுவார்கள் என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.