தற்கொலை செய்துகொண்ட சித்ரா.. ஆசையாக வாங்கிய அந்த நைட்டி.. 'கால்ஸ்' இயக்குனர் உருக்கம்!

By

சென்னை: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்துகொண்டபோது அணிந்திருந்த அந்த நைட்டி பற்றி, கால்ஸ் படத்தின் இயக்குனர் உருக்கமாகக் கூறியுள்ளார்.

Recommended Video

VJ Chitra நடித்த Calls திரைப்படம் First Look Poster | Tamil Filmibeat

பிரபல சின்னத்திரை நடிகை சித்ரா. இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் என்ற தொடரில் நடித்து வந்தார்.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றவர்.

நட்சத்திர ஓட்டல்

நட்சத்திர ஓட்டல்

28 வயதான இவர், தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளினியாகி, பின்னர் நடிகை ஆனார். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு நசரத்பேட்டை அருகே உள்ள ஈவிபி பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்கபதற்காக, சென்னை நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார், சித்ரா.

பதிவு திருமணம்

பதிவு திருமணம்

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவுக்கும் ஹேமந்த் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

முதல் திரைப்படம்

முதல் திரைப்படம்

அப்போது முதலே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கணவர் மற்றும் சித்ராவின் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சித்ரா நடித்த முதல் திரைப்படம், கால்ஸ். இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

இயக்குனர் ஜெ.சபரிஷ்

இயக்குனர் ஜெ.சபரிஷ்

இந்தப் படத்தை இன்பினைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் ஹீரோயினாக சித்ரா நடித்துள்ளார். அவருடைய முதல் படமே கடைசி படமாகிவிட்டது சோகம்தான். இந்நிலையில், கால்ஸ் படத்தின் இயக்குனர் ஜெ.சபரிஷ்டம் சித்ரா பற்றி கேட்டோம். அவர் கூறியதாவது: சித்ரா சிறந்த நடிகை. இந்த படத்தில் அவர் நந்திதா என்ற கேரக்டரில் நடித்துள்ளார்.

அந்த நைட்டி

அந்த நைட்டி

பிபிஓ ஒன்றில் பணியாற்றும் கேரக்டர். அவர் தற்கொலை செய்துகொண்டதை எங்களால் நம்பவே முடியவில்லை. அவர் தற்கொலையின் போது அணிந்திருந்த நைட்டி, எங்கள் படப்பிடிப்புக்காக வாங்கியது. அவர் அதையும் இன்னும் சில உடைகளையும் படப்பிடிப்பு முடிந்ததும், ஆசையாக வாங்கி சென்றார்.

நொறுங்கி விட்டோம்

நொறுங்கி விட்டோம்

ஆனால், அந்த நைட்டியுடன் அவர் உடலை பார்த்ததும் நொறுங்கி விட்டோம். இன்னும் அந்த வேதனையில் இருந்து வெளிவரவில்லை. அவர் மறைவை எங்களால் இப்போதும் நம்ப முடியவில்லை. சித்ரா சிறந்த நடிகையாக வந்திருக்க வேண்டியவர். எங்கள் மொத்த டீமே இப்போது சோகத்தில் இருக்கிறது. இவ்வாறு சபரிஷ் கூறினார்.

ஜனவரி ரிலீஸ்

ஜனவரி ரிலீஸ்

இந்தப் படத்தில், டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி , வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். தமீம் அன்சாரி இசையமைத்துள்ளார். ஜனவரி 1 ஆம் தேதி இதன் டிரைலர் வெளியாக இருக்கிறது. ஜனவரி இறுதியில் படம் ரிலீஸ் ஆகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X