தற்கொலை செய்துகொண்ட சித்ராவுக்கு நயன்தாராதான் ரோல் மாடல்.. 'கால்ஸ்' இயக்குனர் தகவல்!

By

சென்னை: தற்கொலை செய்துகொண்ட நடிகை சித்ராவுக்கு லேடி சூப்பர்ஸ்டார் நயன் தாராதான் ரோல்மாடல் என்று கால்ஸ் படத்தின் இயக்குனர் சொன்னார்.

விஜய் டி.வி.யில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து பிரபலமானவர் சித்ரா.

சின்னத்திரை நடிகையான இவர், அந்த தொடரில் முல்லை என்ற கேரக்டரில் நடித்திருந்தார். ரசிகர்களிடையே அந்த கேரக்டர் வரவேற்பை பெற்றது.

நட்சத்திர ஓட்டல்

நட்சத்திர ஓட்டல்

பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் படப்பிடிப்பு ஈவிபி பிலிம்சிட்டி வளாகத்தில் நடைபெற்று வருகிறது. இதனால் திருவான்மியூரில் உள்ள தனது வீட்டில் இருந்து தினம் சென்றுவர கஷ்டமாக இருந்ததால், நசரேத் பேட்டையில் உள்ள நட்சத்திர ஓட்டல் ஒன்றில் தங்கி இருந்தார், சித்ரா.

பதிவு திருமணம்

பதிவு திருமணம்

இந்நிலையில் கடந்த 9 ஆம் தேதி அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது சின்னத்திரை மற்றும் சினிமா வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. சித்ராவுக்கும் ஹேமந்த் என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில், பதிவு திருமணம் செய்து கொண்டனர்.

பர்ஸ்ட் லுக்

பர்ஸ்ட் லுக்

அப்போது முதலே இருவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கணவர் மற்றும் சித்ராவின் தாயார் கொடுத்த அழுத்தம் காரணமாகவே அவர் தற்கொலை செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், சித்ரா நடித்த முதல் திரைப்படம், கால்ஸ். இதன் பர்ஸ்ட் லுக் இன்று வெளியானது.

தேவதர்ஷினி

தேவதர்ஷினி

இந்தப் படத்தை இன்பினைட் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இதில் ஹீரோயினாக சித்ரா நடித்துள்ளார். டெல்லி கணேஷ், நிழல்கள் ரவி, ஆர்.சுந்தர்ராஜன், தேவதர்ஷினி, வினோதினி வைத்தியநாதன், ஜீவா ரவி, ஸ்ரீரஞ்சனி உட்பட பலரும் நடித்துள்ளனர். ஜெ.சபரிஷ் இயக்கியுள்ளார்.

கொரோனா தடை

கொரோனா தடை

படம் பற்றி இயக்குனர் சபரிஷிடம் கேட்டோம். அவர் கூறும்போது, கடந்த ஜனவரி மாதமே இதன் ஷூட்டிங் முடிந்துவிட்டது. போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் நடந்தபோது கொரோனாவால் தடைபட்டது. பின்னர் செப்டம்பரில் வேலையை தொடங்கினோம். ஜனவரியில் படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளோம்.

வெள்ளித்திரை

வெள்ளித்திரை

அதற்குள் எதிர்பாராத விதமாக படத்தின் நாயகி சித்ரா தற்கொலை செய்துவிட்டார். இது எங்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. அவர் கனவு, வெள்ளித்திரையில் தன்னை காண வேண்டும் என்பது. அதற்குள் அவர் மறைந்ததை நம்ப முடியவில்லை. இந்த படத்தில் நந்திதா என்ற கேரக்டரில் சித்ரா நடித்துள்ளார்.

நயன்தாரா போல

நயன்தாரா போல

அவருக்கு நடிகை நயன்தாராதான் ரோல் மாடல். அவர் போலவே உடைகள் அணிய வேண்டும் என்று விரும்புவார். நயன்தாரா, வேறு சில படங்களில் பண்ணியது போல உடைகளை அணிந்து இந்தப் படத்தின் சில காட்சிகளிலும் நடித்துள்ளார் என்று கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X