மாரி செல்வராஜ் ஆழமான வாழ்வியல் சிந்தனை உடையவர்.. ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர்
சென்னை: தனுஷ், ரஜிஷா விஜயன் ஆகியோர் நடிப்பில் கடந்த வாரம் திரையரங்குகளில் வெளிவந்துள்ள படம் கர்ணன்.
Recommended Video
இந்த படத்தை மாரி செல்வராஜ் இயக்கியுள்ளார், சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். தாணு தயாரித்துள்ளார்.
இந்த படத்தின் ஒளிப்பதிவாளர் தேனி ஈஸ்வர் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து பேட்டியளித்துள்ளார்.

விருதுகள் பெற்றுள்ளார்
கர்ணன் படத்தின் ஒளிப்பதிவாளரான தேனி ஈஸ்வர் அழகர்சாமியின் குதிரை படத்தின் மூலம் அறிமுகமானார். மேற்கு தொடர்ச்சி மலை, பேரன்பு போன்ற தரமான படைப்புகளுக்கு ஒளிப்பதிவாளராக பணியாற்றியுள்ளார். சிறந்த ஒளிப்பதிவாளர் என சில விருதுகளையும் பெற்றுள்ளார்.

வாழ்வியல் சிந்தனை
இயக்குனர் மாரி செல்வராஜ் குறித்து பேசிய தேனி ஈஸ்வர், மாரி செல்வராஜ் ஆழமான வாழ்வியல் சிந்தனை உடையவர் என குறிப்பிட்டுள்ளார். நாம் எளிமையாக எடுத்து கொண்டு கடந்து செல்லும் எளிய மனிதர்களின் பிரச்சனையை மாரி செல்வராஜ் கதையாக கையாண்ட விதம் தனக்கு மிகவும் பிடித்தது என குறிப்பிட்டுள்ளார்.

புதிய யுக்தி
கர்ணன் படத்தில் ஒளிப்பதிவிற்கு புதிதாக என்ன யுக்திகளை கையாண்டுளீர்கள் என்ற கேள்விக்கு, சமீபத்தில் புதிதாக லான்ச் செய்யப்பட்ட Supreme Prime & Signature Prime ஆகிய அட்வான்ஸ லென்ஸ்களை கர்ணன் படத்திற்கு பயன்படுத்தியுள்ளோம் என பேட்டியளித்துள்ளார் தேனி ஈஸ்வர்.

இயக்குனர் பாலு மகேந்திரா
கர்ணன் படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி S. தாணு படத்தின் ஒளிப்பதிவை பார்த்து விட்டு தங்களை பாலு மகேந்திராவுடன் ஒப்பிட்டு பாராட்டி பேசுவது குறித்த கேள்விக்கு, பாலு மகேந்திராவை தனக்கு மிகவும் பிடிக்கும் எனவும், அவருடைய வழியில் தன்னையும் சொல்லுவது ஒரு பெரிய பாக்கியம் என கூறியுள்ளார் தேனி ஈஸ்வர்.


Click it and Unblock the Notifications











