கசமுசா போட்டோ, வீடியோ: நாறிப் போன ட்விட்டர், சுசி லீக்ஸை மறக்க முடியுமா? #SuchiLeaks

By Siva

Recommended Video

கசமுசா போட்டோ, வீடியோ: நாறிப் போன ட்விட்டர், சுசி லீக்ஸை மறக்க முடியுமா?- வீடியோ

சென்னை: கோலிவுட்காரர்களால் சுசி லீக்ஸ் பிரச்சனையை அவ்வளவு எளிதில் மறந்திருக்க முடியாது.

2017ம் ஆண்டு இப்போது தான் துவங்கியது போன்று இருந்தது ஆனால் இன்னும் சில நாட்களில் 2018ம் ஆண்டை வரவேற்க உள்ளோம். 2017ம் ஆண்டு மார்ச் மாதத்தை கோலிவுட்காரர்களால் மறக்கவே முடியாது.

அதற்கு காரணம் சுசி லீக்ஸ்

காயம்

காயம்

நள்ளிரவு பார்ட்டியில் தனுஷின் ஆட்கள் தன்னை தாக்கி காயப்படுத்தியதாகக் கூறு காயத்துடன் கூடிய கையை புகைப்படம் எடுத்து ட்விட்டரில் வெளியிட்டார் பாடகி சுசித்ரா. அந்த புகைப்படத்தை பார்த்தவர்கள் தனுஷா, தாக்குதலா, என்ன சொல்லுகிறீர்கள் சுசி என்று பரபரத்துவிட்டனர்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

பார்ட்டி சண்டை பெரிதாகவே சுசித்ரா நடிகர் தனுஷ், நடிகைகள் ஹன்சிகா, த்ரிஷா உள்ளிட்டோரின் கசமுசா புகைப்படங்களை ட்விட்டரில் வெளியிட்டு அவர்களின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றினார்.

அடி தூள்

அடி தூள்

சசு சில புகைப்படங்களை வெளியிட்ட கையோடு அமலா பால், தனுஷ் லீலை வீடியோவை வெளியிடப்போவதாக அறிவித்து நேரம் கூட குறித்தார். அந்த வீடியோவை பார்க்க பல பேர் தூக்கமின்றி ட்விட்டரிலேயே தவமாய் தவமிருந்தனர்.

ஹேக்

ஹேக்

பல பிரபலங்களின் லீலைகள் வெளியாகும் என்று எதிர்பார்த்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. சுசி தான் சொன்னது போன்று லீலை வீடியோக்களை வெளியிடவில்லை. மாறாக தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாக கூறினார்.

திடீர் மாயம்

திடீர் மாயம்

சுசிக்கு மனச்சிதைவு ஏற்பட்டுள்ளதாக அவரது கணவர் அறிவித்தார். சுசி கணவரை பிரியப் போவதாக கூறப்பட்டது. பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சுசித்ரா திடீர் என்று மாயமானார்.

நல்லா இருக்கேன்

நல்லா இருக்கேன்

சுசியை யாரோ கடத்தி விட்டார்கள், மனநோய்க்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று ஆளாளுக்கு யூகித்துக் கொண்டிருந்தார். சுசியோ தனது கணவருடன் அமெரிக்காவில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டார்.

புகைப்படங்கள்

புகைப்படங்கள்

சுசித்ரா அடங்கிய பிறகு அவரது பெயரில் ஏகப்பட்ட போலி கணக்குகள் ட்விட்டரில் துவங்கப்பட்டன. #SuchiLeaks என்ற ஹேஷ்டேக்கில் நடிகைகள், நடிகர்களின் ஆபாச புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகின.

பயம்

பயம்

#SuchiLeaks அட்டகாசத்தால் பலர் அலுவலகங்களில் ட்விட்டர் பக்கம் போகவே பயந்தனர். சுசி லீக்ஸில் ஏதாவது வில்லங்க வீடியோ அல்லது புகைப்படம் வந்து அதை பாஸ் பார்த்தால் பெயர் டேமேஜாகிவிடும் என்று பலர் அஞ்சிய சம்பவங்களும் நடந்து உண்டு. இப்படியாக சுசித்ரா பிரச்சனை விஸ்வரூபம் எடுத்து புஸ்ஸாகிப் போனது.

பார்ட்டிகள்

பார்ட்டிகள்

சுசி லீக்ஸ் விவகாரத்திற்கு பிறகு பிரபலங்கள் வார இறுதி நாட்களில் ஜாலியாக ஜமாய்க்கும் பார்ட்டிகளுக்கு செல்வதை நிறுத்தினார்கள். எங்கே தங்களின் புகைப்படம் ஏதாவது வெளியாகிவிடுமோ என்ற பயத்தில் பார்ட்டி என்ற பெயரை கேட்டால் கெட்ட வார்த்தையை கேட்பது போன்று இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X