நேற்று மதியம் தொலைபேசியில் பேசிய ரித்தீஷ் இன்று இல்லையே: ஏ.எல். விஜய் கவலை

By Siva

Recommended Video

ஜே.கே. ரித்தீஷ் மரணம்..கண்ணீர் விடும் நடிகர், நடிகைகள்

சென்னை: நேற்று மதியம் தொலைபேசியில் பேசிய ஜே.கே. ரித்தீஷ் இன்று உயிருடன் இல்லை என்பதை நம்ப முடியவில்லை என்று இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

நடிகரும், முன்னாள் எம்.பி.யுமான ஜே. கே. ரித்தீஷ் நேற்று மாரடைப்பால் மரணம் அடைந்தார். நெஞ்சு வலிக்கிறது என்று கூறிய அவரின் உயிர் ஒரு மணிநேரத்தில் போய் விட்டது.

Cant believe JK Ritheesh is no more: AL Vijay

அதற்குள் போய்விட்டீர்களே என்று ரசிகர்களும், பிரபலங்களும் கவலை தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இயக்குநர் ஏ.எல். விஜய் ரித்தீஷின் மரணம் குறித்து தெரிவித்திருப்பதாவது,

நேற்று மதியம் என்னுடன் தொலைபேசியில் பேசிய குரல் என் நண்பர் ஜே.கே. ரித்தீஷ் இன்று நம்மிடம் இல்லை என்ற செய்தியை என்னால் நம்ப முடியவில்லை. ஜீரணிக்கவே முடியவில்லை. எங்கள் அணி நடிகர் சங்கத்தில் ஜெயிப்பதற்கு மிகப் பெரிய தூணாக இருந்தவர்.

மிகவும் வேதனையாக உள்ளது. அவரின் குடும்பத்தாருக்கு என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் ஆத்மா சாந்தியடையட்டும். முடிந்தால் திரும்பி வாங்க என்று இயக்குநர் ஏ.எல். விஜய் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X