'இது எங்க ஏரியா மேல வராத'... அதர்வாவை அசால்ட் செய்த புறா!

அதர்வா, நயன்தாரா நடித்துள்ள இமைக்கா நொடிகள் திரைப்படம் வரும் 30ம் தேதி திரைக்கு வருகிறது.

சென்னை: இமைக்கா நொடிகள் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என நடிகர் அதர்வா தெரிவித்துள்ளார்.

கேமியோ ஃபிலிம்ஸ் சி.ஜே.ஜெயகுமார் தயாரிப்பில், அதர்வா, நயன்தாரா, அனுராக் கஷ்யாப், ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள படம் "இமைக்கா நொடிகள்". டிமாண்டி காலனி படத்தை இயக்கிய, அஜய் ஞானமுத்து இயக்கியிருக்கும் இந்த படம் எமோஷனல் ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ளது.

சைக்கோ கொலைகாரன் ருத்ராவாக அனுராக் காஷ்யப் நடித்திருக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி சிறப்பு தோற்றத்தில், ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஆகஸ்ட் 30ஆம் தேதி வெளியாகிறது.

வாழ்நாளில் மறக்க முடியாது

வாழ்நாளில் மறக்க முடியாது

படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் அதர்வா, இமைக்கா நொடிகள் படத்தின் ஆக்ஷன் காட்சிகளை தன் வாழ்நாளில் மறக்க முடியாது என்றார்.

ரோலர் கோஸ்டர் ரைட்

ரோலர் கோஸ்டர் ரைட்

பத்திரிகையாளர்களிடம் அதர்வா கூறியாதாவது, " இமைக்கா நொடிகள் ரோலர் கோஸ்டர் ரைடை விட மிகவும் கஷ்டமான ஒரு ரைட். என்ன ஆனாலும் இந்த படத்தை சமரசத்தோடு எடுக்க வேண்டாம் என நானும் அஜயும் முடிவெடுத்தோம்.

பிடித்த ஆல்பம்

பிடித்த ஆல்பம்

நிறைய அலைச்சலுக்கு பிறகு தயாரிப்பாளர் ஜெயகுமார் படத்துக்குள் வந்தார். அவர் தான் கதையை நம்பி செலவு செய்தார். நயன்தாரா, ஆர்டி ராஜசேகர், அனுராக் காஷ்யாப் என என் ஃபேவரைட் லிஸ்டில் உள்ள அத்தனை பேருடனும் ஒரே படத்தில் வேலை செய்தது பெரிய சர்ப்ரைஸ். இந்த படத்தின் ஆல்பம் எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

கயிற்றில் தொங்கினேன்

கயிற்றில் தொங்கினேன்

இந்த படத்தின் சண்டைக்காட்சிகளில் நடித்ததை என் வாழ்நாளில் மறக்க முடியாது. ஒரு ஆக்ஷன் காட்சிக்காக 15 மாடி கட்டடத்தில் கயிற்றில் தொங்கியபடி, ஒவ்வொரு மாடியாக தாவித்தாவி குதித்தேன்.

அசால்ட் செய்த புறா

அசால்ட் செய்த புறா

அப்போது, 12வது மாடியில் கயிற்றில் தொங்கிக்கொண்டிருந்தபோது ஒரு புறா ஒன்று ஜன்னலில் உட்கார்ந்திருந்தது. அதை நான் விரட்ட முயற்சி செய்தேன். ஆனால் அது நகரவே இல்லை. அப்போது தான் புரிந்தது நான் அதன் ஏரியாவில் இருக்கிறேன் என்பது. சரி நாமே கீழே குதித்துவிடுவோம் என இறங்கிவிட்டேன்", என அதர்வா கூறினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X