விஸ்வாசம் ஷூட்டிங்கை நடத்த சென்னையில் இடமே இல்லையா?: ஆர்.கே. செல்வமணி
Recommended Video

சென்னை: விஸ்வாசம் ஷூட்டிங் நடத்த சென்னையில் இடமே இல்லையா என்று கேட்டுள்ளார் பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி.
அஜித்தின் விஸ்வாசம் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடந்து கொண்டிருக்கிறது. சென்னை போன்று செட் போட்டு படப்பிடிப்பை நடத்தி வருகிறார் இயக்குனர் சிவா.
இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்த பெப்சி தலைவர் ஆர்.கே. செல்வமணி கூறியதாவது,

வேண்டுகோள்
தயாரிப்பாளர்களுக்கு மட்டும் அல்ல, நடிகர்களுக்கும் ஒரு வேண்டுகோளை வைக்க விரும்புகிறோம். எங்களின் இழப்புகளை ஏற்றுக் கொண்டு கூட தயாரிப்பாளர்களுக்கு பல்வேறு சலுகைகளை வழங்கியுள்ளோம்.

எதிர்பார்ப்பு
தயாரிப்பாளர்களின் செலவு, சிரமம் குறையும், படங்களின் எண்ணிக்கை கூடும், வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்ற எதிர்பார்ப்பில் தான் பல சலுகைகளை அளித்துள்ளோம்.

காலா
சில படங்கள் தமிழ்நாட்டுக்கு வெளியே படமாக்கப்படும்போது எங்களின் தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு குறைகிறது. காலா படத்தை இங்கு ஷூட் செய்தார்கள். ரூ. 12 கோடி மதிப்புள்ள செட்டில் ஷூட் பண்ணபோது 10 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்தார்கள். சினிமாக்காரர்களுக்கு மட்டும் அல்ல அப்பகுதி மக்களுக்கே 6 மாதத்திற்கான வேலைவாய்ப்பை அந்த படம் ஏற்படுத்திக் கொடுத்தது.

அஜித்
அஜித்தின் விஸ்வாசம் படம் இவிபியில் நடக்கிறது. முன்பெல்லாம் படப்பிடிப்பு வெளியிடங்களில் நடப்பதற்கு ஒரு காரணம் இருந்தது. சில பேரோட வசதிக்காக வேறு மாநிலத்தில் போய் செட் போட்டுள்ளார்கள். அதை நம் மாநிலத்திலேயே செய்யலாமே. இதனால் இங்குள்ள தொழிலாளர்களின் வேலைவாய்ப்பு பாதிக்கப்பட்டுள்ளது.

வேண்டுகோள்
அதனால் சம்பந்தப்பட்ட நடிகர்கள், தயாரிப்பாளர்கள் மறுபரிசீலனை செய்து இனிமேல் இங்கு இருக்கும் தொழிலாளர்களை வைத்து படம் எடுக்கவும். அதற்காக நான் இங்கேயே படம் பண்ண வேண்டும் என்று நான் வற்புறுத்தவில்லை. இங்கு இல்லாத விஷயங்களுக்காக வெளியிடங்களுக்கு செல்வதை நாங்கள் ஒன்றும் சொல்லவில்லை.

ஹைதராபாத்
ஒரு ப்ளோரில் குறிப்பிட்ட இடத்தில் செட்டை போட்டு சென்னை மாதிரி, திருநெல்வேலி மாதிரி இடத்தை ஹைதராபாத்தில் உருவாக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதே என் வேண்டுகோள். இனிமேல் தயவு செய்து இப்படி செய்யாதீர்கள். நம் மாநில தொழிலாளர்களின் வேலைவாய்ப்பை அழித்துவிடாதீர்கள் என்று கேட்டுக் கொள்கிறேன் என ஆர்.கே. செல்வமணி தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications