என் பசங்கள பார்க்க வெயிட் பண்றேன்.. டிடி நீலகண்டன் போட்ட ட்வீட்.. குழப்பத்தில் நயன் ரசிகர்கள்!

சென்னை: நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இரட்டை ஆண் குழந்தைகளுக்கு அப்பா அம்மா ஆகி உள்ள சந்தோஷ செய்தி அறிந்ததும் விஜய் டிவி தொகுப்பாளினியும் நயன்தாராவின் தோழியுமான டிடி நீலகண்டன் வாழ்த்தி உள்ளார்.

நடிகர் கவினை தொடர்ந்து இருவரையும் டிடி நீலகண்டன் ட்வீட் போட்டு வாழ்த்தி உள்ளார்.

பிக் பாஸ் வீட்டுக்கு டிடி நீலகண்டன் வருவார் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு கடைசி நேரத்தில் ஏமாற்றமே மிஞ்சியது.

நயன்தாரா தோழி

நயன்தாரா தோழி

டிடி நீலகண்டன் நயன்தாராவின் நெருங்கிய தோழியாக நீண்ட காலம் ரொம்பவே நெருக்கமாக உள்ளார். விஜய் டிவியில் நயன்தாரா பேட்டி வர காரணமும் டிடி நீலகண்டன் தான் எனக் கூறுகின்றனர். இந்நிலையில், நயன்தாரா இரு ஆண் குழந்தைகளுக்கு அம்மாவான செய்தி அறிந்ததும் முதல் ஆளாக வந்து டிடி நீலகண்டன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நிச்சயம் நடந்ததே

நிச்சயம் நடந்ததே

நயன்தாராவுக்கும் விக்னேஷ் சிவனுக்கும் நிச்சயதார்த்தம் நடந்த செய்தி உலகத்துக்கு தெரிய வர காரணமே டிடி நீலகண்டன் விஜய் டிவி பேட்டியில் கேட்ட அந்த கேள்வி தான். டிடி நீலகண்டன் கேட்டதுமே இருவருக்கும் இடையே கடந்த ஆண்டு நிச்சயம் ஆகி விட்டது என நெற்றிக்கண் படத்தின் புரமோஷனல் பேட்டியில் கூறியிருந்தார்.

டிடி நீலகண்டன் வாழ்த்து

டிடி நீலகண்டன் வாழ்த்து

நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் அப்பா அம்மாவாக மாறியதை அறிந்ததும் டிடி நீலகண்டன் தனது ட்விட்டர் பக்கத்தில் விக்னேஷ் சிவனின் ட்வீட்டை ரீட்வீட் செய்து வாழ்த்தி உள்ளார். டிடி நீலகண்டனின் ட்வீட் சற்றே சில நெட்டிசன்களை குழப்பி உள்ளது.

என்னோட பசங்க

என்னோட பசங்க

"Can't wait to seeeee my boysssssss Wishing Gods abundance of blessing on them forever forever VigneshShivN #Nayanthara Enter into the satisfying world of parenthood my darlings" என்னோட பசங்களை பார்க்க வெறித்தனமா வெயிட் பண்றேன் என டிடி நீலகண்டன் ட்வீட் போட்ட நிலையில், என்னது அவங்க ரெண்டு பேரும் உங்களோட பசங்களா.. சொல்லவே இல்லை என நெட்டிசன்கள் குழம்பிப் போய் கமெண்ட் அடித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X