TTF வாசனின் லைசென்சை ரத்து செய்யணும்.. அவருக்கு பணத்தில் தான் குறி!

சென்னை: டி.டி.எஃப் வாசன் தொடர்ந்து இதுபோன்று போக்குவரத்து விதிகளை மீறிவருவதால் அவரது லைசன்ஸ் ரத்தாகும் வாய்ப்பு உள்ளது.

டிடிஎஃப் வாசன் காஞ்சிபுரம் அடுத்த பாலுசெட்டி அருகே தேசிய நெடுஞ்சாலையில் விபத்தில் சிக்கினார்.

வேகமாக பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வீலிங் செய்ததால், அவரது பைக் கட்டுப்பாட்டை இழந்து பல்டி அடித்து சுக்கு நூறாக நொறுங்கியது.

Can TTF Vasans license be revoked after he was injured in an accident,

கை முறிவு: பைக்கில் இருந்து தூக்கி வீசப்பட்ட டி.டி.எப் வாசனை அக்கம்பக்கத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர். விபத்தில் சிக்கிய டி.டி.எப். வாசனுக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு மாவு கட்டுபோடப்பட்டுள்ளது. தலைக்கவசம் மற்றும் பைக் ரைடர் உடை அணிந்திருந்தால் அவர் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினார்.

பிஸ்னஸ்: இந்த விவகாரம் குறித்து பத்திரிக்கையாளர் செல்வராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில்,டி.டி.எஃப் வாசன் இதை ஒரு பிஸ்னசாக மாற்றி விட்டார். அவர் மட்டுமில்லை அவரைச் சார்ந்த நண்பர்களும் இதை ஒரு பணம் ஈட்டும் தொழிலாகத்தான் பார்க்கின்னர். 40 சப்க்ரைபர்ஸ் வைத்து இருக்கும் டி.டி.எஃப் வாசனை பலர் பின் தொடர்வதற்கு காரணம், சினிமா ஹீரோ போல செட்டுக்குள் பைக் ஓட்டாமல் ரியலாக பைக் ஓட்டுவதால், இன்றைய இளம் தலைமுறையினருக்கு அது மிகவும் பிடித்து இருக்கிறது.

சமூக அக்கறை இல்லை: யூடியூபில் இவ்வளவு பிரபலமாக இருக்கும் டி.டி.எஃப் வாசனுக்கு சமூக அக்கறை இல்லை. விபத்து நிகழ்ந்த போது அவர், பாதுகாப்பு உடை அணிந்து இருந்ததால், அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினார். ஆனால், 22 லட்ச ரூபாய் பைக் சுக்கு நூறாக நொறுங்கிவிட்டது. இவர் பாதுகாப்பாக சென்றதால் தப்பித்தார். இவரின் பைக் பறந்து சென்று வேறு ஒருவரின் வாகனத்தின் மீது விழுந்து இருந்தால் என்ன நடந்து இருக்கும்.

லைசென்சை ரத்து செய்யலாம்: டி.டி.எஃப் வாசன் பகிர்ந்த ஒவ்வொரு வீடியோவிலுமே விதி மீறல் இருக்கிறறது. ஒவ்வொன்றுக்கும் 100 வழக்கு போடலாம். மேலும், TTF வாசனின் லைசென்சை ரத்து செய்ய வேண்டும் என்று ஆர்டிஓவிற்கு பரிந்துரை செய்து அவரது லைசன்சை ரத்து செய்யலாம். ஆர்டிஓ ஆபிசர் ஆறு மாசமோ அல்லது 3மாதமோ லைசன்சை ரத்து செய்யலாம்.

நண்பர்கள் விட மாட்டார்கள்: யூடியூபில் TTF வாசனை அவரது ரசிகர்கள் ஹீரோவாகத்தான் பார்க்கிறார்கள். இதனால், இதைவைத்து இலவசமாக பைக் ஓட்ட கற்றுக் கொடுப்பது போன்றவற்றை செய்யலாம். இந்த விபத்திற்கு பிறகு இனிமேல் வீலிங் செய்ய மாட்டேன் என்று வாசனே முடிவு செய்தாலும், கூட இருக்கும் நண்பர்கள் விட மாட்டார்கள் என்று பத்திரிக்கையாளர் செல்வராஜ் கூறியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X