twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    கார் டயரை திருடிய சூப்பர் ஸ்டார்: அட, நெசமாத்தான்பா

    By Siva
    |

    மும்பை: பாலிவுட் நடிகர் ஷாருக்கான் விலை உயர்ந்த காரின் டயரை திருடியது உங்களுக்கு தெரியுமா?

    பாலிவுட்டின் மூன்று முக்கிய கான்களில் ஒருவர் ஷாருக்கான். அவர் ஆனந்த் எல். ராய் இயக்கத்தில் நடித்த ஜீரோ படம் அண்மையில் வெளியானது. படத்தை பார்த்த சினிமா விமர்சகர்கள் கிழித்து தொங்கவிட்டுவிட்டனர்.

    அந்த அளவுக்கு படம் மோசம் என்று விமர்சனம் எழுந்தது.

    2018ம் ஆண்டின் சூப்பர் "ஸ்டார்ஸ்" யாரு.. வாங்க.. ஓட்டுப் போடுங்க!

    விளம்பரம்

    விளம்பரம்

    கதை இல்லை என்றால் அது எந்த கான்கள் நடித்தாலும் படம் ஓடாது என்பதை புரிய வைத்துவிட்டார்கள் பாலிவுட் ரசிகர்கள். இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஷாருக்கான் கூறியது அவரின் ரசிகர்களை மட்டும் அல்ல அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    டயர்

    டயர்

    நான் காரில் சென்று கொண்டிருந்தபோது டயர் பஞ்சராகிவிட்டது. அருகில் பஞ்சர் பார்க்கும் கடை எதுவும் இல்லை. நான் என் காரில் வைத்திருந்த ஸ்டெப்னியை எடுத்து மாட்டினேன். அதன் பிறகு தான் இன்னொரு டயரும் பஞ்சரானது தெரிய வந்தது என்று தெரிவித்தார் ஷாருக்கான்.

    ஷாருக்கான்

    ஷாருக்கான்

    என் கார் டயர் பஞ்சரான இடத்திற்கு அருகே விலை உயர்ந்த கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அந்த கார் டயரை எடுத்து என் காரில் மாட்டினேன். பின்னர் டயருக்கு நன்றி என்று ஒரு பேப்பரில் எழுதி அந்த காரில் வைத்துவிட்டேன். நான் வழக்கமாக இப்படி செய்யும் ஆள் இல்லை. அந்த ஒரு முறை மட்டுமே திருடினேன் என்று ஷாருக்கான் கூறினார்.

    ஹீரோ

    ஹீரோ

    ஷாருக்கான் ஹீரோவாக நடிப்பதை நிறுத்திக் கொள்ளும் நேரம் வந்துவிட்டது. அவர் வயதுக்கு ஏற்ற கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிக்க வேண்டும் என்று விமர்சகர்கள் தெரிவித்துள்ளார்கள். ஒரு ஹிட் கொடுக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறார் ஷாருக்கான் என்பது குறிப்பிடத்தக்கது.

    English summary
    Bollywood actor Shah Rukh Khan said that he once stole a tyre from an expensive car.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X