ஒரே விரலால் சிலிண்டரை தூக்கிய நடிகர்.. 'உங்களால முடியுமா பாஸ்?' பாடிபில்டர் நடிகருக்கு சவால்!
கொச்சி: பிரபல குள்ள நடிகர் பக்ரு வெளியிட்டுள்ள சவால், வைரலாகி வருகிறது.
Recommended Video
சசி இயக்கத்தில் ஜீவா நடித்த டிஷ்யூம் படம் மூலம் தமிழில் அறிமுகமானவர், மலையாள நடிகர் பக்ரு.
உயரம் குறைவான நடிகர் பக்ரு, கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றவர்.

விஜய்யின் காவலன்
கின்னஸ் பக்ரு என்று அழைக்கப்படும் அவர், மலையளத்தில் ஏராளமான படங்களில் நடித்துள்ளார். தமிழில் சூர்யாவின் 7ஆம் அறிவு, விஜய்யின் காவலன், அறியான், அற்புதத்தீவு, தலை எழுத்து உட்பட சில படங்களில் நடித்துள்ளார். இவர் குட்டியும் கோலும் என்ற படத்தை இயக்கியும் உள்ளார். பேன்ஸி டிரெஸ் என்ற படத்தைத் தயாரித்தும் இருக்கிறார்.

திருமணம்
தொலைக்காட்சி சீரியல்களிலும், காமெடி ஷோக்களிலும் நடித்து வரும் பக்ரு, காயத்ரி மோகன் என்பவரை கடந்த 2006 ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு தீபா கீர்த்தி என்ற மகள் இருக்கிறார். இப்போது, கொரோனா காரணமாக லாக்டவுன் பிறக்கப்பட்டுள்ளது. சில பகுதிகளில் இந்த லாக்டவுன் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருந்தாலும் மக்கள் வெளியே அதிகமாக வருவதில்லை.

கின்னஸ் பக்ரு
இதனால் சினிமா பிரபலங்கள் தங்களது சமூக வலைத்தளப் பக்கங்களில் ஒவ்வொரு நடிகர், நடிகைகளுக்கும், 'இதை போல உங்களால் செய்ய முடியுமா?' என்று சவால் விட்டு வருகின்றனர். இதனால் சமூகவலைத்தளங்களில் அவ்வப்போது ஏதாவது ஒரு சேலஞ்ச் டிரெண்டாகும். இந்நிலையில் நடிகர் கின்னஸ் பக்ருவும் ஒரு சேலஞ்சை கூறியுள்ளார்.

செய்ய முடியுமா?
இவர் ஒரு விரலால், கேஸ் சிலிஸ்டரை தூக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இதை போல உங்களால் செய்ய முடியுமா? என்று நடிகரும் பாடி பில்டருமான அபு சலீம் என்ற அபூக்காவுக்கு அவர் சவால் விட்டுள்ளார். இந்த சவால் சமூக வலைத்தளத்தில் வைரலானது.

நிற்க முடியாது
சில ரசிகர்கள், வாய்ப்பே இல்லை தலைவா, இதெல்லாம் உங்களால்தான் முடியும் என்று கூறியுள்ளனர். உங்க முன்னால யாரும் நிற்க முடியாது என்று கூறியுள்ளனர். பக்ரு வெளியிட்டிருப்பது, அவர் ஹீரோவாக நடித்துள்ள ஸ்வந்தம் பார்யா ஜிந்தாபாத் என்ற மலையாளப் படத்தில் உள்ள ஸ்டில் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











