கேன்சருக்கு பலியான இசையமைப்பாளர் சவுந்தர்யன் மகன்!
பிரபல இசையமைப்பாளர் சவுந்தர்யனின் மகன் கபி மொழியன் கேன்சர் நோய்க்கு பலியானார். அவருக்கு வயது 15.
சேரன் பாண்டியன் படத்தில் இசையமைப்பாளராக அறிமுகமானவர் சவுந்தர்யன். தொடர்ந்து சிந்து நதி பூ , கோபுர தீபம், நதிகள் நனைவதில்லை போன்ற படங்களுக்கு இசையமைத்தார் சவுந்தர்யன்.

இவரது மகன் பெயர் கபி மொழியன். 15 வயதே நிரம்பிய கபி மொழியன் கேன்சரால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
எவ்வளவோ சிகிச்சைகள் அளித்தும் பலனின்றி இன்று அதிகாலை உயிரிழந்தார்.
அவருக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
Comments


Click it and Unblock the Notifications