அறுவை சிகிச்சையின்போது இளையராஜா பாட்டு... நேரில் சந்தித்து வாழ்த்துக் கூறிய இசைஞானி
சென்னை இளையராஜாவின் பாடல்களுக்கு உலக அளவில் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
மனதை பாரமாக்குவதிலும் அல்லது மனதை லேசாக்குவதிலும் இளையராஜாவின் பாடல்களை யாரும் ஈடு செய்து விட முடியாது.
அந்தவகையில் இளையராஜாவின் பாடலை ஒரு இக்கட்டான சூழலில் பாடிய அவரது ரசிகையை அவர் நேரில் சந்தித்து உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இசைஞானி இளையராஜா
இசைஞானி என்று அனைவராலும் பாராட்டப்படுபவர் இளையராஜா. அவரது பாடல்களுக்கு உலகெங்கிலும் ரசிகர்கள் ஏராளமாக காணப்படுகின்றனர். அவரது பாடல்களை விரும்பாத உள்ளங்கள் இருக்க முடியாது. அந்த வகையில் மெலடி ஆக இருந்தாலும் குத்து பாடலாக இருந்தாலும் அவர் தனக்கே உரிய ஸ்டைலில் அந்த பாடலை சிறப்பாக்கி விடுவார்.

இசையுலகின் முடிசூடா மன்னன்
80 மற்றும் 90களில் முடிசூடா மன்னனாக கோலிவுட்டில் வலம் வந்தவர் இசைஞானி இளையராஜா. கோலிவுட் மட்டுமின்றி இந்திய அளவில் அவர் தனது பாடல்களின் மூலம் முத்திரையைப் பதித்து வருகிறார். சாதாரண இயக்குனராக இருந்தாலும் அறிமுக இயக்குனராக இருந்தாலும் தன்னுடைய அழகான பாடல்களை கொடுத்ததன் மூலம் அவர்களை வெற்றிப்பட இயக்குனர்களாக மாற்றிய பெருமை ராஜாவுக்கே உரியது.

ஏராளமான ரசிகர்கள்
80களில் இருந்த ரசிகர்களை மட்டுமின்றி தற்போது வரை தன்னுடைய இசையால் அனைத்து விதமான ரசிகர்களையும் கொண்டுள்ளவர் இளையராஜா. தற்போதைய தன்னுடைய இசையின்மூலம் இளம் ரசிகர்களையும் ஏராளமாக கொண்டுள்ளார்.

அறுவை சிகிச்சையில் இளையராஜா பாட்டு
இந்நிலையில் சமீபத்தில் கேன்சர் பாதித்த பெண் ஒருவர் தன்னுடைய அறுவை சிகிச்சையின் போது வலி தெரியாமல் இருக்க இளையராஜாவின் பாடலை பாடிய சம்பவம் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடக இசை பாடகியாகவும் ஆசிரியையாகவும் இருக்கும் சீதாலட்சுமி என்ற கேன்சர் பாதித்த பெண் தற்போது இந்தப் பெருமைக்கு உள்ளாகியுள்ளார்.

வலியை குறைக்க பாடல்
சென்னையை சேர்ந்த இவருக்கு சமீபத்தில் அவருக்கு புற்றுநோய்க்காக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அப்போது இவருக்கு மயக்க மருந்து கொடுக்க முடியாத சூழல் இருந்துள்ளது. இதையடுத்து வலியை மறப்பதற்காகவும் பயத்தை குறைப்பதற்காக இவரை மருத்துவர்கள் பாடச் சொல்லி கேட்டுள்ளனர். இதையடுத்து இளையராஜாவின் கற்பூர பொம்மை ஒன்று என்ற பாடலை பாடியுள்ளார் சீதாலஷ்மி.

பாட்டு பாடிய முதல் நோயாளி
இதையடுத்து அந்த சூழலே மிகவும் உற்சாகமாக மாறியுள்ளது. அறுவை சிகிச்சையின்போது பாட்டு பாடிய முதல் நோயாளி என்று தற்போது இவரது இந்த பாடல் வைரலாகி வருகிறது. தற்போது சிகிச்சை முடிந்து சீதாலஷ்மி வீடு திரும்பியுள்ள நிலையில் அவருக்கு மருத்துவமனை நிர்வாகம் இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

இளையராஜா நேரில் வாழ்த்து
தன்னுடைய வலியை மறக்க யாருடைய பாடலை சீதாலஷ்மி பாடினாரோ அவரை சந்திக்க வைத்து இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. சீதாலஷ்மி மற்றும் இளையராஜா இணைந்திருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











