புற்றுநோய் பாதிப்பு.. கடமை தவறாத நடிகர்.. கண்ணீர் விட்டு அழுத சூப்பர் குட் சுப்பிரமணி
சென்னை: புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நடிகர் சூப்பர் குட் சுப்பிரமணி சமீபத்தில் உதவி கேட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டார். நடிகர்கள் பலரும் அவருக்கு உதவிக்கரம் நீட்டி வருகின்றனர். இந்நிலையில், இறக்கும் தருவாயில் இருக்கும் அவர் நடித்து முடித்த ஒரு படத்திற்காக டப்பிங் பேசியிருக்கும் வீடியோ கண்ணீரை வரவழைக்கிறது. எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என ரசிகர்கள் கவலைப்பட்டு பேசியுள்ளனர்.
முண்டாசுப்பட்டி, மகாராஜா, சூரரை போற்று, சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் சூப்பர் குட் சுப்பிரமணி. தமிழ் திரையுலகில் 30 ஆண்டுக்கும் மேல பணியாற்றி வருகிறார். இவர், சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்ததால் இவரை சூப்பர் குட் சுப்பிரமணி என்று அழைக்கப்படுவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில்,சூப்பர் குட் சுப்பிரமணி புற்று நோய் பாதிப்பால் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியானது. நடிகர் சுப்பிரமணிக்கு புற்று நோய் பாதிப்பில் 4ஆவது கட்டம் என மருத்துவர்கள் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது. மருத்துவர்களும் கைவிரித்த நிலையில், அவரது குடும்பத்தை பாதுகாக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது.

கார்த்தி உதவி: சூப்பர் குட் சுப்பிரமணியின் வீடியோ வெளியான நிலையில், நடிகர் கார்த்தி அவரது குழந்தைகளின் படிப்புச்செலவை ஏற்பதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து சமீபத்தில் அவர் அளித்த பேட்டியில் உடல் நலம் குன்றி மோசமான நிலையில் இருப்பதை பார்த்த ரசிகர்கள் மன வேதனையடைந்தனர். மேலும், தமிழ் திரையுலகில் நண்பர்களிடம் உதவிக்கரம் வேண்டி வீடியோ ஒன்றையும் வெளியிட்டார். அதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த், சத்யராஜ், சிம்பு, சூர்யா, கார்த்தி, சாந்துனு, சமுத்திரகனி, சிவகார்த்திகேயன், விஜய் முத்து, பூச்சி முருகன், விஜய் டிவி பாலா, இயக்குனர்கள் ஜவஹர் மித்ரன், வீர அன்பரசு மற்றும் நடிகர் சங்கம், இயக்குனர்கள் சங்கம், எழுத்தாளர்கள் சங்கம், இன்னும் பலர் பணம் உதவி செய்து வருகின்றனர்.
டப்பிங் பேசிய நடிகர்: புற்று நோய் பாதிப்பில் இருந்து உயிருக்கு போராடி வரும் சூப்பர் குட் சுப்பிரமணி தற்போது அவர் நடித்து முடித்த கமாண்டோவின் லவ் ஸ்டோரி படத்திற்காக டப்பிங் பேசியிருக்கும் வீடியோ வெளியாகியுள்ளது. இறக்கும் தருவாயிலும் கடமை உணர்வோடு டப்பிங் பேசியிருப்பதை பார்த்து படக்குழுவினரும் கண்ணீர் விட்டு அழுதனர். அப்போது ஒவ்வொரு காட்சியை பார்த்து கொண்டு பேசுவதை பார்த்த பலர் எப்படி இருந்த மனுஷன் இப்படி ஆகிட்டாரே என மனதிற்குள்ளே கேட்டுக்கொண்டனர். மேலும், சூப்பர் குட் சுப்பிரமணி தமிழக அரசிடமும் அவரது குடு்ம்ப்ததாருக்கு உதவிட கோரிக்கை வைத்திருக்கிறார்.
கோரிக்கை: கலைஞர் வசனத்தில் பெண் சிங்கம் படத்தில் நான் பணிபுரிந்துள்ளேன். தற்போது
புற்றுநோயினால் அவதிப்பட்டு வருவதால், எனக்கும், என் குடும்பத்தாருக்கும் உதவிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். முதல்வரும், துணை முதல்வரும் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை இருப்பதாகக் கூறினார். நடிகர் சங்கம், இயக்குனர் சங்கம், நடிகர்கள் ரஜினிகாந்த், கார்த்தி, சமுத்திரகனி மற்றும் பலர் சூப்பர் குட் சுப்பிரமணிக்கு உதவியிருப்பது குறிப்பிடத்தக்கது. மேலும், நடக்க முடியாமல் கால்களும் வீங்கியிருப்பதை பார்த்த நெட்டிசன்கள் கண்ணீர் விட்டு கதறுகின்றனர்.


Click it and Unblock the Notifications











