ரசிகரை கட்டிப்பிடித்த பொன்னியின் செல்வன் நடிகை.. கேன்ஸ் திரைப்பட விழாவில் நடந்த ருசீகரம்!

சென்னை: கேன்ஸ் திரைப்பட விழாவில் இந்தியாவின் சார்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் கலந்து கொண்டார்.

20 ஆண்டுகளுக்கும் மேலாக கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் இந்தியா சார்பில் அதே இளமையுடனும் அழகுடனும் நடந்து உலக ரசிகர்களை கவர்ந்து வருகிறார் இந்த பொன்னியின் செல்வன் நடிகை.

இந்நிலையில், ரசிகர் ஒருவருக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த 'ஹக்' வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

கேன்ஸும் ஐஸ்வர்யா ராயும்

கேன்ஸும் ஐஸ்வர்யா ராயும்

தீபிகா படுகோன் இந்த ஆண்டு கேன்ஸ் ஜூரியாக பதவியேற்றதை போல கடந்த 2003ம் ஆண்டே இந்தியா சார்பில் ஜூரியாக கலந்து கொண்டவர் ஐஸ்வர்யா ராய். 2005ம் ஆண்டு கேன்ஸ் திரைப்பட விழாவையே துவக்கி வைத்தவர் ஐஸ்வர்யா ராய் தான். தொடர்ந்து 20 ஆண்டுகளாக கேன்ஸ் ரெட் கார்ப்பெட்டில் ராம்ப் வாக் செய்து வருகிறார் ஐஸ்வர்யா ராய்.

கணவர் மற்றும் மகளுடன்

கணவர் மற்றும் மகளுடன்

இந்த ஆண்டும் நடிகை ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவை மிஸ் செய்யவே இல்லை. தனது கணவர் அபிஷேக் பச்சன் மற்றும் மகள் ஆராத்யாவுடன் ஐஸ்வர்யா ராய் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொண்டுள்ளார். தினமும் வித்தியாசமான உடைகளை அணிந்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

கட்டிப்பிடித்த ஐஸ்வர்யா ராய்

ஆண்டுதோறும் கேன்ஸ் திரைப்பட விழாவில் கலந்து கொள்ளும் நடிகை ஐஸ்வர்யா ராய்க்கு அங்கே ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில், ரசிகர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களை நோக்கி ஐஸ்வர்யா ராய் கையசைத்து வந்தார். அப்போது ஒரு ரசிகர் ஐஸ்வர்யா ராயை ஹக் பண்ண முயல, நடிகை ஐஸ்வர்யா ராய் அவருக்கு அன்புடன் ஒரு ஹக் கொடுத்து விட்டு அங்கிருந்து சென்ற வீடியோ சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.

டவுன் டு எர்த்

டவுன் டு எர்த்

நடிகை ஐஸ்வர்யா ராய் ரொம்பவே அன்பானவர், டவுன் டு எர்த் என அந்த ஹக் வாங்கிய ரசிகர் ஐஸ்வர்யா ராயை பாராட்டி உள்ளார். மேலும், இந்த வீடியோவை பார்த்த ஏகப்பட்ட ரசிகர்கள், மற்ற நடிகைகளை போல பந்தா காட்டாமல் ரசிகருக்கு ஐஸ்வர்யா ராய் கொடுத்த ஹக்கை பாராட்டி வருகின்றனர்.

பொன்னியின் செல்வன் நடிகை

பொன்னியின் செல்வன் நடிகை

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் இருவர், குரு, ராவணன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ள நடிகை ஐஸ்வர்யா ராய் மீண்டும் அவர் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் படத்தில் நடித்துள்ளார். வரும் செப்டம்பர் 30ம் தேதி வெளியாக உள்ள பொன்னியின் செல்வன் படத்தில் நந்தினி தேவியாகவும், மந்தாகினியாகவும் டபுள் ஆக்‌ஷனில் மிரட்ட காத்திருக்கிறார்.

ரஜினிக்கு ஜோடி

ரஜினிக்கு ஜோடி

இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்த ஐஸ்வர்யா ராய் தலைவர் 169 படத்தில் மீண்டும் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாகவும் சில பேச்சுக்கள் அடிபட்டுள்ளன. ஆனால், அதுதொடர்பான எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் சன் பிக்சர்ஸ் மற்றும் இயக்குநர் நெல்சன் இன்னமும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X