'ஏ' படத்தில் நடிப்பேன், ஆனால் கேமராவுக்கு முன் 'அது' முடியாது: சர்ச்சை நடிகை
மும்பை: அடல்ட் படத்தில் நடிக்க முடியும் ஆனால் கேமராவுக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது என்று நடிகை ஷெர்லின் சோப்ரா தெரிவித்துள்ளார்.
பிளேபாய் பத்திரிகைக்காக நிர்வாணமாக போஸ் கொடுத்த முதல் இந்திய பெண் ஷெர்லின் சோப்ரா. காமசூத்ரா 3டி படத்தில் பல காட்சிகளில் நிர்வாணமாக நடித்துள்ளார் அவர். அந்த படத்தில் நடித்தபோது செட்டில் அவர் நிர்வாணமாக அமர்ந்திருந்த புகைப்படங்கள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த படம் இன்னும் ரிலீஸாகவில்லை. காமசூத்ரா 3டி பட இயக்குநர் ருபேஷ் பாலுக்கும், ஷெர்லினுக்கும் இடையே பிரச்சனை ஏற்பட்டதால் அவர் அந்த படத்தில் இருந்து வெளியேறினார். ருபேஷ் கேவலமானவர், மா* வேலை பார்ப்பவர் என்று திட்டினார் ஷெர்லின்.
ஷெர்லின் சமூக வலைதளத்தில் தொடர்ந்து தனது அரை மற்றும் முழு நிர்வாண புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் அவர் பேட்டி ஒன்றில் கூறியிருப்பதாவது,

ஒர்க்அவுட்
நான் தினமும் ஜிம்மிற்கு சென்று ஒர்க்அவுட் செய்கிறேன். நான் அப்படி செய்ய நிறைய காரணங்கள் உள்ளது. எனக்கு ஃபிட்டாக இருப்பது பிடிக்கும். குறைந்த அளவு உடை அணிந்து ஷூட்டிங்கில் கலந்து கொள்ள பிடிக்கும். அதில் என்ன தவறு உள்ளது?. அரைகுறை ஆடை அணியும் பெண் மோசமானவள் என்று மக்கள் நினைக்கிறார்கள்.

உடை
நான் நல்லவள் என்பதை நிரூபிக்க என் உடலை மறைக்க வேண்டுமா?. நான் அங்கம் தெரியும்படி உடை அணிந்தால் உடனே நான் கெட்டவளா?. இது போன்ற முட்டாள்தனமாக விதிமுறைகளை கொண்டு வந்தது யார்?. நான் என்ன உடை அணிகிறேன் என்பது அடுத்தவர்களுக்கு தேவையில்லாதது. அதற்காக மக்கள் என்னை விமர்சித்தால் அது பற்றி எனக்கு கவலை இல்லை.

விதிமுறை
நிறுவனங்களின் எம்.டி., சி.இ.ஓ. வாக இருக்கும் பல பெண்கள் மினி ஸ்கர்ட்டுகள் அணிகிறார்கள். பெரிய பதவிகளில் இருக்கும் பல பெண்கள் லோகட் உடை அணிகிறார்கள். அது வக்கிரமானதாக தெரியவில்லை. அவர்கள் அப்படி உடை அணிவதில் தவறு எதுவும் இல்லை. இந்த அளவுக்கு உடம்பு தெரியும்படி தான் உடை அணிய வேண்டும் என்று சட்டம் உள்ளதா?. நான் எந்த பாகங்களை காட்டலாம், காட்டக் கூடாது என்று யாராவது சொல்லுங்களேன்.

கேமரா
என்னால் அடல்ட் படத்தில் நடிக்க முடியும். ஆனால் கேமராவுக்கு முன்பு செக்ஸ் வைத்துக் கொள்ள முடியாது. மாறாக பேக்லெஸ் அல்லது சில நெருக்கமான காட்சிகளில் நடிக்க முடியும். உறவு கொள்வது போன்ற சூசகமான காட்சிகளில் தான் நடிக்க முடியும் என்று தெரிவித்துள்ளார் ஷெர்லின் சோப்ரா.


Click it and Unblock the Notifications











