உம்முனு.. கம்முனு.. ஜம்முனு.. விஜய் அப்பா கிட்ட இருந்து இப்படியொரு அடல்ட் படமா?

சென்னை: விஜய்யின் துப்பாக்கி, சர்கார் படங்களை இயக்கிய ஏ.ஆர். முருகதாஸ், இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள கேப்மாரி படத்தின் டிரைலரை தற்போது வெளியிட்டுள்ளார்.

இருட்டு அறையில் முரட்டு குத்து படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் மீண்டுமொரு அடல்ட் காமெடி படம் வெளிவர காத்திருக்கிறது.

Capmaari Official Trailer released by AR Murugadoss

இந்த படத்தில் ஜெய், வைபவி சாண்டில்யா, அதுல்யா ரவி, லிவிங்ஸ்டன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இந்த படம் நடிகர் ஜெய்க்கு 25வது படம். இப்போதான் 25வது படமா என்று கேட்காதீர்கள். அதேபோல, இயக்குநர் எஸ்.ஏ.சி.,க்கு இது 75வது படம். 75 படங்கள் இயக்கி விட்டாரா என்றும் வாயை பிளக்காதீர்கள்.

தற்போது வெளியாகியுள்ள கேப்மாரி டிரைலரில், நடிகர் ஜெய், மாறி மாறி இரண்டு நாயகிகளுக்கும் உதட்டில் முத்தம் கொடுப்பது, செக்ஸில் ஈடுபடுவது, இரட்டை அர்த்த வசனங்களை வார்த்தைக்கு வார்த்தை பேசுவது என காம காமெடியாக டிரைலர் வெளிவந்துள்ளது.

மேலும், டிரைலரில் வரும் ஒரு பாடல் காட்சியில், சர்கார் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசிய உம்முனு.. கம்முனு.. ஜம்முனு.. வசனத்தை பாடல் வரிகளாக மாற்றி, அதை நம்ம அண்ணன் சொன்னாரு என விஜய்யையும் துணைக்கு அழைத்துள்ளார் நடிகர் ஜெய். இந்த படத்திற்கு தளபதி ரசிகர்களின் ஆதரவு கிடைக்கிறதா என்று பொறுத்திருந்து பார்ப்போம். ஹெட்செட் மாட்டிக்கிட்டு சத்தம் காட்டாம இந்த டிரைலரை இப்போ பாருங்க!

More from Filmibeat

Read more about: trailer டிரைலர்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X