பக்கா பிளான்.. பாலா கேங் ஒரு பக்கம்.. அன்பு கேங் மறு பக்கம்.. தனியாளாய் க்ளீன் பண்ணும் தலைவன் ஆரி!
சென்னை: ஞாயிற்றுக் கிழமை எபிசோடு முடிந்ததும் இரவு நேரத்தில், தனியாளாய் வீட்டை சுத்தம் செய்யும் ஆரியை அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
Recommended Video

பாலா மற்றும் ஷிவானி தனியாக ஆரி பற்றி தீவிரமாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
மறுபக்கம் ரியோ, சோம் மற்றும் கேபி ரம்யாவை பற்றிய பேச்சை நாமினேஷனுக்காக விவாதித்து வருகின்றனர்.

அன்பு கேங் ஒரு பக்கம்
அர்ச்சனா அக்கா போன பிறகும் ரியோ, கேபி மற்றும் சோமசேகர் அன்பு கேங்கை விடவில்லை. அதுதான் அவர்களுடைய ஸ்ட்ராட்டஜியாக கடைசி வரை விளையாடி வருகின்றனர். அன்பு கேங்கை சேர்ந்த ரியோ, சோம் மற்றும் கேபி ரம்யா பற்றி கார்டன் ஏரியாவில் ரகசிய ஆலோசனை கூட்டம் நடத்துகின்றனர்.

நாமினேஷனுக்காக
திங்கட்கிழமை நாமினேஷன் நடக்கவுள்ள நிலையில், ஆரியும் பாலாவும் கண்டிப்பாக நாமினேஷனில் வருவார்கள். ஆனால், அடுத்த வாரமும் ரம்யா பாண்டியனை இழுத்து விட்டு வீட்டுக்கு அனுப்பி விடலாம் என்கிற முயற்சியில் அன்பு கேங் இரவு நேரத்தில் அப்படியொரு ஆலோசனைக் கூட்டத்தை நடத்தியதாகவே பார்க்கப்படுகிறது.

பாலாவின் பப்பட்
ஆஜீத் வெளியேறிய நிலையில், இப்போதைக்கு அந்த வீட்டில் பாலாவின் பப்பட்டாக இருப்பது ஷிவானி மட்டும் தான். ஆரியிடம் நல்லவன் போல மன்னிப்பு கேட்டு விட்டு, அந்த டாப்பிக்கை மறந்து விடாமல், மீண்டும் ஷிவானியும் பாலாவும் ஆரி பற்று படுக்கையறையில் தனியாக பேசி பிளான் பண்ணுவது சரிகிடையாது.

தலைவன் ஆரி
பிக் பாஸ் வீட்டின் அடுத்த வார தலைவர் ரியோ சீரியஸா ரம்யா பற்றிய டிஸ்கஷனில் இருக்கும் போது, ஞாயிற்றுக் கிழமை எபிசோடு முடிந்ததும், இந்த வார தலைவனான ஆரி தனியாளாக ஒட்டுமொத்த வீட்டையும் சுத்தம் செய்து கொண்டிருந்ததை பார்த்த ரசிகர்கள் ஆரியை புகழ்ந்து வருகின்றனர்.

பேச ஆளில்லை
இந்த பிக் பாஸ் வீட்டில் தன்னிடம் பேச ஆளில்லை என்பதை ஆரி நன்றாகவே புரிந்து கொண்டார். ரம்யாவிடம் பேச நினைத்த நிலையில், அதையும் ரம்யா அப்படியே சண்டையாக மாற்றிவிட்டார். இந்நிலையில், தனியாக ஒட்டுமொத்த சுத்தம் செய்யும் வேலையையும் இழுத்துப் போட்டு செய்தது சிறப்பு.

சொல்லிருக்கலாம்ல பிரதர்
திங்கட்கிழமைக்கான நாமினேஷன் டிஸ்கஷன் முடிந்ததும் உள்ளே வந்த ரியோவும் சோமும் ஆரி தனியாக வேலை செய்வதை பார்த்து, சொல்லியிருக்கலாம்ல பிரதர், நாங்க வந்து செஞ்சிருப்போம்ல என ஆறுதலாக பேசினர். அவர்களுக்கே அது புரிந்து முன்னதாக வந்து செய்திருந்தால் சிறப்பாக இருந்திருக்கும்.

கண்டுக்காத பாலா
நீங்களாவது வெளியில இருந்தீங்க, பாலா நான் வேலை செய்றதை பார்த்துட்டு அப்படியே கிராஸ் பண்ணி போய் ஷிவானி கூட பேசுறார். கூப்பிட்டு செய்யுங்க என்று சொன்னால், சண்டையை உருவாக்குவார் என்று தான் கூப்பிடவில்லை என ஆரி அக்கறை காட்டிய சோம் மற்றும் ரியோவிடம் புலம்பினார். மக்களுக்கு ஆரியை பிடிக்க இது தான் காரணம்!

ரம்யா எங்கே
அப்பாடா இந்த வாரம் ஆஜீத் வெளியேறிவிட்டான். நல்ல வேளை நாம வெளியில போகல என்கிற சந்தோஷத்திலேயே ரம்யா சீக்கிரம் படுத்து தூங்கி இருப்பார். அடுத்த வாரம் ரம்யாவா? ஷிவானியா? யாரு வெளியே போவாங்கன்னு தெரியலையே என்றும், அடுத்த வாரமாவது டபுள் எவிக்ஷன் வைங்க கமல் சார் என்றும் கோரிக்கை எழுந்து வருகிறது.


Click it and Unblock the Notifications











