என் ஷீல்டையே பரிசாத் தரேன்.. தங்கையை காப்பாற்ற போராடிய சிறுவனுக்கு.. கேப்டன் அமெரிக்கா பாராட்டு!

லாஸ் ஏஞ்சல்ஸ்: தங்கையை கடிக்க வந்த நாயுடன் போராடி 90 வீரத் தையல்களை போட்டுள்ள 6 வயது வீர சிறுவனை கேப்டன் அமெரிக்கா நடிகர் கிறிஸ் எவான்ஸ் பாராட்டி வீடியோ வெளியிட்டு இருக்கிறார்.

தான் இறந்தாலும் பரவாயில்லை, தன் தங்கை மீது ஒரு கடி கூட படக் கூடாது என நாயுடன் நடத்திய போராட்டத்தில் உடல் முழுக்க அந்த சிறுவனுக்கு ஏகப்பட்ட காயங்கள்.

இந்த சம்பவத்தை அறிந்த அவனது அத்தை போட்டோ எடுத்து அந்த சிறுவனின் வீரச் செயலை இன்ஸ்டாவில் பதிவிட, ஓவர் நைட்டில் உலக ஃபேமஸ் ஆகிவிட்டான்.

என் தங்கச்சியை கடிக்க வர்றியா.. இப்ப வா பார்ப்போம்.. நாயுடன் போராடிய சிறுவன்.. முகத்தில் 90 தையல்கள்

தங்கைக்காக

தங்கைக்காக

அமெரிக்காவின் வியோமிங் பகுதியை சார்ந்த 6 வயது சிறுவன் பிரிட்ஜர் வாக்கர் தனது தங்கையை வெறி பிடித்த ஜெர்மன் ஷெப்பர்ட் நாயிடம் இருந்து காப்பாற்ற வேண்டும் என நினைத்து போராடி உள்ளான். தன் உயிரே போனாலும் பரவாயில்லை தங்கைக்கு ஒன்றும் நேரக் கூடாது என பல மணி நேரம் நாயுடன் போராடிய அந்த சிறுவனை பல இடங்களில் அந்த நாய் கடித்துக் குதறியது.

சூப்பர் ஹீரோ

சூப்பர் ஹீரோ

நாயுடன் போட்ட சண்டையில் உடல் முழுக்க காயங்கள் ஏற்பட்டதை கண்ட அவனது அத்தை, அதே நிலையில், அவனை புகைப்படம் எடுத்து, அவனது இந்த பாச போராட்டம் உலகிற்கு தெரிய வேண்டும் என வீங்கிய கண்களுடன் தங்கையுடன் நிற்கும் போட்டோவை எடுத்து இன்ஸ்டாவில் பதிவிட, ஓவர் நைட்டில் சூப்பர் ஹீரோ ஆகி உள்ளார் அந்த சிறுவன்.

View this post on Instagram

There are no words. We are so, so thankful.

A post shared by Nikki Walker (@nicolenoelwalker) on

கேப்டன் அமெரிக்கா

சிறுவனின் இந்த வீரச் செயலை ஹாலிவுட் பிரபலங்கள் முதல் சர்வதேச பிரபலங்கள் வரை பலரும் பாராட்டி வருகின்றனர். இந்நிலையில், அவெஞ்சர்ஸ், கேப்டன் அமெரிக்கா உள்ளிட்ட படங்களில் கேப்டன் அமெரிக்கா கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் கிறிஸ் எவான்ஸ், சிறுவனின் தீரத்தை பாராட்டி வீடியோ வெளியிட்டுள்ளார்.

தனது ஷீல்ட்

தனது ஷீல்ட்

நீ செய்த செயல் சாதாரண செயல் அல்ல, சூப்பர் ஹீரோக்களுக்கு கொஞ்சமும் குறைவில்லாத செயல். நீயும் ஒரு சூப்பர் ஹீரோ தான். வெகு சீக்கிரமாக, உனக்கு கேப்டன் அமெரிக்காவின் பிரத்யேகமான ஷீல்டை பரிசாக அனுப்பி வைக்கிறேன் என பாராட்டியது மட்டுமின்றி யாருக்கும் கிடைக்காத பரிசையும் கொடுக்க முடிவு செய்துள்ளது ஹாலிவுட் ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X