Dhoni: ஒரு வாரத்தில் தலைவர் படம் ரிலீஸ்.. தல கூட அனிருத் என்னங்க விளையாடிட்டு இருக்காரு!

சென்னை: இந்திய சினிமாவிலேயே தற்போது மிகவும் பிசியான அதே நேரத்தில் தூக்கீட்டு வாங்கடா செல்லத்த என்று தயாரிப்பாளர்களும், பெரிய பெரிய ஸ்டார்களும் சொல்லும் அளவுக்கு இருக்கும் இசையமைப்பாளர் அனிருத். இவரது இசையில் உருவாகியுள்ள கூலி படம் இன்னும் ஒரு வாரத்தில் ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அவர் செம கூலாக, கேப்டன் கூல் தல தோனியுடன் 'பெடல்' விளையாடிக்கொண்டு உள்ளார்.

கூலி படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம். ரஜினி மட்டும் இல்லாமல் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், ஸ்ருதிஹாசன், உபேந்திரா, சௌபின் சாஹிர், ஆமிர் கான் என பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். மேலும், நடிகை பூஜா ஹெக்டே மோனிகா என்ற பாடலுக்கு இசை அமைத்துள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படம் வரும் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது.

Captain Cool MS Dhoni And Rock Star Anirudh Plays Padel Video Goes Trending
Photo Credit:

ரிலீஸில் போட்டி?: இந்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகும் 171வது படம். இது மட்டும் இல்லாமல், அவரது 50வது ஆண்டு திரைப்பயணத்தில் வெளியாகும் படம். இந்த படம் வெளியாகும் நாளில் பாலிவுட்டில் வார் 2 படமும் வெளியாக உள்ளது. வார் 2 படத்தில் ஹர்திக் ரோஷன், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்துள்ளனர். பான் இந்தியா அளவில் இரண்டு படங்களும் வெளியாக உள்ளதால், எந்த படத்திற்கு அதிக தியேட்டர்கள் கிடைக்கும் என்ற கேள்வி பலருக்கும் உள்ளது. தியேட்டர்களின் எண்ணிக்கையை மையமாகக் கொண்டு தான் படத்தின் முதல் நாள் வசூல் அமையும். ஏற்கனவே வெளிநாட்டில் குறிப்பாக வட அமெரிக்காவில் வார் 2 படத்தைக் காட்டிலும் கூலு படத்திற்குத்தான் அதிக டிக்கெட்டுகள் விற்பனை ஆகியுள்ளது.

ரசிகர்கள்: கூலி படம் வெளியாக இன்னும் ஒரு வாரம் தான் இருக்கிறது. இந்நிலையில், ' யோவ்.. மிலிட்ரி நீ எங்கயா இங்க?' என்று கேட்பது போல தல தோனி கூட செம கூலாக பெடல் விளையாடிக் கொண்டு இருக்கிறார் அனிருத். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. அனிருத் செம ஜாலியாக பெடல் விளையாடுவதை பார்த்தால் கூலி படத்தில் தனது வேலைகள் அனைத்தையும் அவர் முடித்துவிட்டார் போலத் தெரிகிறதே என்று ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகிறார்கள். அதேபோல், தல தோனியுடன் இவர் இருப்பதால், இவர் ராஞ்சிக்குப் போனாரா? அல்லது அவர் சென்னைக்கு வந்துள்ளாரா? என்ற கேள்வியையும் ரசிகர்கள் கேட்டு வருகிறார்கள்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X