கையில் துப்பாக்கியுடன் மிரண்டு நிற்கும் ஆர்யா… ‘கேப்டன்‘ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ரிலீஸ் !

சென்னை : நடிகர் ஆர்யா நடிக்கும் கேப்டன் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

டெடி மற்றும் சார்ப்பட்டா பரம்பரை போன்ற படங்களில் அழுத்தமான கதையம்சங்கள் கொண்ட திரைப்படங்களில் தொடர்ந்து நடித்தார் ஆர்யா. பிளாக்பஸ்டர் திரைப்படங்களில் நடித்ததன் மூலம் புகழின் உச்சத்தை எட்டினார் ஆர்யா.

 Captain first look poster out

அவரது நடிப்பில் அடுத்து வரவிருக்கும் திரைப்படம் கேப்டன். இப்படத்தை சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ளார். ஆர்யாவும் திங்க் ஸ்டுடியோஸும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில், சிம்ரன், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 Captain first look poster out

டெடி திரைப்படத்திற்கு பிறகு ஆர்யா சக்தி சௌந்தர் ராஜன் ஜோடி மீண்டும் இப்படத்தில் இணைந்துள்ளதால், இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கேப்டன் ஃபர்ஸ்ட் லுக், பார்வையாளர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. அந்த போஸ்டரில் துப்பாக்கியுடன் ஆர்யா நிற்க, அவரின் பின்னால் ராட்சத மிருகம் ஒன்று காணப்படுகிறது. இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 Captain first look poster out

இந்த வித்தியாசமான போஸ்டரை உருவாக்க, படக்குழு ஒன்றரை ஆண்டுகள் உழைத்துள்ளதாக கூறப்படுகிறது. கம்ப்யூட்டரில் கிராஃபிக்சில் உருவாக்கப்பட்ட அந்த ராட்சத மிருகம் தத்ரூபமாக வர அவர் கடுமையாக உழைந்துள்ளனர். ரத்தத்தை சூடேற்றும் பரபரப்புடன், திகில் திரைப்படமாக உருவாகி உளள, இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X