வெளியானது 'கேப்டன்' முதல் சிங்கிள்: ஆர்யாவுக்காக இமானுடன் சேர்ந்து யுவன் கொடுத்த அசத்தல் ட்ரீட்

சென்னை: ஆர்யாவின் நடிப்பில் 'கேப்டன்' திரைப்படம் மிக வேகமாக உருவாகி வருகிறது.

'டெடி' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஆர்யா, இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் கூட்டணி 'கேப்டன்' படத்தில் இரண்டாவது முறையாக இணைந்துள்ளனர்.

ஆர்யாவுக்கு ஜோடியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் இத்திரைப்படம் சயின்ஸ் பிக்சன் பின்னணியில் இருக்கும் என கூறப்படுகிறது.

கலக்கல் ஆர்யா

கலக்கல் ஆர்யா

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக கலக்கி வரும் ஆர்யா, வித்தியாசமான கதைகளை தேர்வுசெய்து நடித்து வருகிறார். பா. ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'சார்பட்டா பரம்பரை' திரைப்படம், அமேசானில் வெளியாகி மிகப் பெரிய வெற்றிப் பெற்றது. அதேபோல், சக்தி செளந்தர் ராஜன் இயக்கத்தில் ஆர்யா நடித்த 'டெடி' திரைப்படமும், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

மீண்டும் இணைந்த கூட்டணி

மீண்டும் இணைந்த கூட்டணி

'டெடி' படத்தின் வெற்றியால், ஆர்யாவும் இயக்குநர் சக்தி செளந்தர் ராஜனும் மீண்டும் ஒருபடத்தில் இணைய முடிவெடுத்தனர். அதன்படி, 'கேப்டன்' என்ற தலைப்பில் புதிய படம் பிரமாண்டமாக தயாராகி வருகிறது. இந்தப் படம் அரிய வகையிலான கொடூரமான விலங்கை பின்னணியாகக் கொண்டு, சயின்ஸ் பிக்சன் ஜானரில் உருவாகி வருவதாக சொல்லப்படுகிறது.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இயக்குநர் சக்தி செளந்தர் ராஜன் மிருதன், டிக் டிக் டிக், டெடி என வித்தியாசமான கதைகளை படமாக்கி வருவதால், 'கேப்டன்' படத்திற்கும் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆர்யா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சிம்ரன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன் என பலரும் நடித்து வருவது, 'கேப்டன்' படத்திற்கு இன்னும் பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.

ரெட் ஜெயன்ட் ரிலீஸ்

ரெட் ஜெயன்ட் ரிலீஸ்

இந்தப் படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை, உதயநிதியின் ரெட் ஜெயன்ட் நிறுவனம் கைப்பற்றியுள்ளதும், படத்தின் வெற்றியை உறுதி செய்துள்ளது. படப்பிடிப்பு முழுவதும் முடிந்துவிட்ட நிலையில், 'கேப்டன்' திரைப்படம் செப்டம்பர் 8ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இமான் யுவன் கூட்டணி

இமான் யுவன் கூட்டணி

இந்த நிலையில், 'கேப்டன்' படத்தின் முதல் பாடல் வெளியாகி, பல லட்சம் பார்வைகளை கடந்து நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'நினைவுகள்' எனத் தொடங்கும் இந்தப் பாடலை மதன் கார்க்கி எழுதியுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை, யுவன் சங்கர் ராஜா க்யூட்டாக பாடி, ரசிகர்களை சொக்க வைத்துள்ளார். ஃபரண்ட்ஷிப் பாடலாக உருவாகியுள்ள 'நினைவுகள்' பாடலை, ரசிகர்களும் முனுமுனுக்க தொடங்கிவிட்டனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X