பிரை லார்சன் ரசிகர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. கேப்டன் மார்வெல் இரண்டாம் பாகமும் ரெடியாகுதாம்!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரை லார்சன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான கேப்டன் மார்வெல்லின் அடுத்த பாகம் ரெடியாகிறது.

மார்வெல் ஹீரோக்களிலேயே அதிக சக்தி படைத்த கதாபாத்திரம் என்றால் அது கேப்டன் மார்வெல் தான்.

அவெஞ்சர்ஸ் எண்ட்கேமுக்கு முன்பாக அந்த கதாபாத்திரத்தை ரிவீல் செய்ய வேண்டும் என்று நினைத்த மார்வெல் அவசர அவசரமாக கேப்டன் மார்வெல் படத்தை கடந்த ஆண்டு ரிலீஸ் செய்திருந்தது.

பிரை லார்சன்

பிரை லார்சன்

ஹாலிவுட்டின் முன்னணி நடிகையான பிரை லார்சன் கேப்டன் மார்வெல் கதாபாத்திரத்தில் நடித்து உலகளவில் தனக்கான ரசிகர்களை அதிகரித்துள்ளார். அவெஞ்சர்ஸ் எண்ட்கேம், ரூம், தி கிரேட் வால் உள்ளிட்ட பல படங்களில் பிரை லார்சன் அசத்தியுள்ளார். ஆஸ்கர், கோல்டன் குளோப் போன்ற உயரிய விருதுகளையும் லார்சன் பெற்றுள்ளார்.

தானோஸை வீழ்த்திய தலைவி

தானோஸை வீழ்த்திய தலைவி

அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார் படத்தில் பாதி சூப்பர் ஹீரோக்கள் தானோஸின் ஒரு சொடுக்கில் மாய்ந்து போனார்கள். அவர்களை மீட்க, தானோஸை அழிக்க கேப்டன் மார்வெல் உதவி அவெஞ்சர்ஸ் டீமுக்கு தேவைப் பட்டது. அவரும், வந்த சில நொடிகளில் தானோஸை மடக்க, தோர் அவனது தலையை வெட்டி வீழ்த்துவார். அதே போல படத்தின் கிளைமேக்ஸ் காட்சியிலும் மீண்டும் தானோஸை அழிக்க அயன்மேனுக்கு கேப்டன் மார்வெல் உறுதுணையாக இருப்பார்.

ஷீரோ

ஷீரோ

மார்வெல் உலகில் ஹீரோ கதைகள் அதிகம் வந்த நிலையில், தற்போது ஷீரோவிற்கான வரவேற்பு அதிகரித்துள்ளது. அவெஞ்சர்ஸ் படங்களில் பிளாக் விடோவாக நீண்ட காலமாக இருந்து வரும் ஸ்கார்லட் ஜான்சனின் தனிக்கதை இனிமேல் தான் படமாக வரப் போகிறது. மார்வெல் உலகின் முதல் ஷீரோ படமாக வெளியானது கேப்டன் மார்வெல் தான்.

அதீத சக்தி

அதீத சக்தி

மார்வெல் அவெஞ்சர்ஸ் ஹீரோக்களிடம் இருக்கும் அனைத்து சக்திகளும் அடங்கிய சூப்பர் ஹீரோவாக கேப்டன் மார்வெல் உருவாக்கப்பட்டுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் வெளியான கேப்டன் மார்வெல் உலகளவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது மட்டுமின்றி பாக்ஸ் ஆஃபிஸிலும் பல ஆயிரம் கோடிகளை கலெக்ட் செய்தது.

கேப்டன் மார்வெல் 2

கேப்டன் மார்வெல் 2

கேப்டன் மார்வெலை தொடர்ந்து கடந்த ஆண்டு ஏப்ரலில் வெளியான அவெஞ்சர்ஸ் எண்ட்கேம் படத்திலும் தலைவி பிரை லார்சனின் அதிரடி ஆட்டத்தை ரசிகர்கள் கண்டு களித்தனர். ஆனால், கேப்டன் மார்வெல் படத்தில் இருந்த அளவிற்கு அவருக்கான ஸ்பேஸ் இல்லை. இந்நிலையில், கேப்டன் மார்வெல் 2ம் பாகம் உருவாகி வரும் தகவல் வெளியாகி பிரை லார்சன் ரசிகர்களை குஷிபடுத்தியுள்ளது.

எப்போ ரிலீஸ்

எப்போ ரிலீஸ்

அன்னா போடன் மற்றும் ரியான் ஃப்ளெக் இணைந்து இயக்கும் கேப்டன் மார்வெல் படத்தின் இரண்டாம் பாகம் வரும் 2022 கோடை விடுமுறை கொண்டாட்டமாக ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சாமுவேல் ஜாக்சன், பென் மெண்டல்சன், கெம்மா சான் உள்ளிட்ட பலர் இந்த படத்திலும் தொடர்வார்கள் என தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X