Captain Miller: கேப்டன் மில்லர் ஓடிடி ரிலீஸுக்கு வந்த சோதனை... பாய்காட் சிக்கலில் தனுஷ்..?
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் கடந்த மாதம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட இந்தப் படம் பெரியளவில் வெற்றிப் பெறவில்லை. இந்நிலையில், வரும் 9ம் தேதி அமேசான் ப்ரைம் தளத்தில் கேப்டன் மில்லர் வெளியாகிறது. ஆனால் திடீரென ஓடிடி ரிலீஸுக்கு எதிராக பாய்காட் கேப்டன் மில்லர் என்ற ஹேஷ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
ட்ரெண்டாகும் பாய்காட் கேப்டன் மில்லர்
தனுஷ் நடிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கிய திரைப்படம் கேப்டன் மில்லர். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவான இந்தப் படத்தில், ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அதேபோல், கேப்டன் மில்லர் பீரியட் ஜானரில் ஆக்ஷன் த்ரில்லர் மூவியாக உருவாகியிருந்தது.

வெளியாகும் முன்பே கேப்டன் மில்லர் படத்துக்கு அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் முதல் நாளில் மட்டுமே சிறப்பான ஓபனிங் வந்த கேப்டன் மில்லருக்கு அடுத்தடுத்த நாட்களில் நெகட்டிவான விமர்சனங்கள் கிடைத்தன. இதனால் சிவகார்த்திகேயனின் அயலான் படத்தை விடவும் தனுஷின் கேப்டன் மில்லர் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் தடுமாறியது. இந்நிலையில் இந்தப் படம் வரும் 9ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது.
கேப்டன் மில்லர் ஓடிடி ரைட்ஸை அமேசான் ப்ரைம் நிறுவனம் கைப்பற்றியது. இதனையடுத்து கேப்டன் மில்லர் பிப்.9ம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாகும் என அறிவித்துள்ளது. அதன்படி இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என நான்கு மொழிகளில் வெளியாகிறது. அதேநேரம் இந்தப் படம் இந்தியில் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இதனையடுத்து கேப்டன் மில்லர் படம் ஏன் இந்தியில் வெளியாகவில்லை என பாலிவுட் ரசிகர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இந்தப் படத்தை இந்தியிலும் வெளியிட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள அவர்கள், பாய்காட் கேப்டன் மில்லர் என ஹேஷ்டேக்கையும் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் தனுஷின் கேப்டன் மில்லர் ஓடிடியில் வெளியாவதில் சிக்கல் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தனுஷ் தமிழ் மட்டுமின்றி இந்தியிலும் படங்கள் நடித்து வருகிறார். இதுவரை தனுஷ் நடித்த இரண்டு இந்தி படங்களுமே சூப்பர் ஹிட் அடித்தன. இதனைத் தொடர்ந்து மேலும் ஒரு இந்தி படத்திலும் தனுஷ் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் பாலிவுட்டிலும் தனுஷுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதன் காரணமாகவே கேப்டன் மில்லர் படத்தை அமேசான் ப்ரைமில் இந்தியிலும் ரிலீஸ் செய்ய வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











