பச்சை நிறமே.. பச்சை நிறமே.. என்னடா இது 2024 பொங்கலுக்கு வந்த சோதனை.. கேப்டன் மில்லர் vs அயலான்!

சென்னை: போன வருஷம் பொங்கலுக்கு நள்ளிரவு ஒரு மணிக்கு டிக்கெட் கிடைக்குமா? அதிகாலை 4 மணி காட்சிக்கு டிக்கெட் கிடைக்குமா என ரசிகர்கள் அலைந்து கொண்டிருந்த நிலையில், இந்த ஆண்டு முதல் நாள் ஷோ முழுவதும் வெளியிட்ட அனைத்து தியேட்டர்களிலும் ஹவுஸ்ஃபுல் ஆவது ஆகுமா என்கிற நிலையில் தியேட்டர் ஓனர்கள் எல்லாம் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு நாளை சில படங்கள் வெளியாக உள்ள நிலையில், அதில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களின் டிக்கெட் புக்கிங் எப்படி இருக்கிறது என்பது குறித்து இங்கே பார்க்கலாம்.

Captain Miller and Ayalaan ticket bookings still dull for First Day shocks Kollywood

அயலான்: ஆர். ரவிக்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன், ரகுல் ப்ரீத் சிங் நடிப்பில் ஏலியன் ஜானர் படமாக உருவாகி உள்ள அயலான் படத்துக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். சில ஆண்டுகளுக்கு முன்பே வெளியாக வேண்டிய இந்த படம் தயாரிப்பு பணிகள் தாமதம் காரணமாக அப்படியே கிடப்பில் போடப்பட தற்போது சிவகார்த்திகேயன் முயற்சியால் ரிலீஸ் வரை வந்திருக்கிறது. நாளை திட்டமிட்டப்படி உலகம் முழுவதும் இந்த படம் வெளியாகி விடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர்: வசந்த் ரவி ந்டிப்பில் ராக்கி, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சாணிக் காயிதம் படங்களை இயக்கிய அருண் மாதேஸ்வரன் நடிகர் தனுஷ், சிவராஜ் குமார், பிரியங்கா மோகன், சந்தீப் கிஷன், அதிதி பாலன் என நட்சத்திர பட்டாளத்துடன் போர் களத்தை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள கேப்டன் மில்லர் படத்துடன் இந்த பொங்கலுக்கு களமிறங்குகிறார். ஜி.வி. பிரகாஷ் இந்த படத்துக்கு இசையமைத்து இருக்கிறார். சமீபத்தில் வெளியான படத்தின் டிரெய்லர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.

Captain Miller and Ayalaan ticket bookings still dull for First Day shocks Kollywood

டிக்கெட் புக்கிங் டல்: மேலும், இந்த பொங்கலுக்கு விஜய் சேதுபதியின் மெரி கிறிஸ்துமஸ், அருண் விஜய், எமி ஜாக்சன் நடித்துள்ள மிஷன் 1 அச்சம் என்பது இல்லையே உள்ளிட்ட படங்களும் தமிழில் வெளியாகின்றன. ஆனால், கேப்டன் மில்லர் மற்றும் அயலான் படங்களுக்கே டிக்கெட் புக்கிங் ஆரம்பிக்கப்பட்டு 2 நாட்கள் ஆகிய நிலையில், இன்னமும் பல திரையரங்குகளில் பச்சை நிறமாக காட்சி அளிப்பது தியேட்டர் ஓனர்களையும் படக்குழுவினரையும் அப்செட் ஆக்கி உள்ளது.

ரஜினி, விஜய், அஜித் படங்கள்: கடந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு விஜய்யின் வாரிசு மற்றும் அஜித்தின் துணிவு திரைப்படங்கள் வெளியாகின. இரண்டு படங்களும் சுமாராக இருந்தாலும் பெரிய நடிகர்களை பார்க்கத்தான் மக்கள் தியேட்டருக்கு அலைமோதி வருகின்றனர். ரஜினி, விஜய் மற்றும் அஜித் படங்களை தவிர தமிழ் சினிமாவில் டிக்கெட் டிமாண்ட் மற்ற நடிகர்களுக்கு ஏற்படுவதில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு பொங்கலுக்கு பாக்ஸ் ஆபிஸ் வசூல் எப்படி இருக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது.

பொங்கல் வின்னர் யாரு?: 60 முதல் 70 சதவீத டிக்கெட் புக்கிங் தற்போது புக்மை ஷோ உள்ளிட்ட ஆன்லைன் ஆப் மூலம் டிராக் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த பொங்கலுக்கு கேப்டன் மில்லர் vs அயலான் மோதல் அதிகரித்து இருக்கும் நிலையில், பொங்கல் வின்னர் யாராக இருக்கும் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது. குடும்பத்துடன் அயலான் படத்தை ரசிகர்கள் ரசிக்க உள்ளனரா? அல்லது தனுஷின் ஆயுத சத்தங்கள் நிறைந்த கேப்டன் மில்லரை பார்த்து ஓட வைக்கப் போகின்றனரா என்பது நாளை தெரிந்து விடும். இதுவரை டிக்கெட் புக்கிங்கில் கேப்டன் மில்லர் அயலானை விட சற்றே லீடிங்கில் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X