சத்ய ஜோதி பிலிம்ஸ் வழங்கும் “கேப்டன் மில்லர்” திரைப்படத்தின் Pre Release Event விழா!!

சத்ய ஜோதி பிலிம்ஸ் T.G. தியாகராஜன் வழங்கும், தேசிய விருது பெற்ற நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில், வரலாற்றுப் பின்னணியில் பிரம்மாண்ட ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ள படம் 'கேப்டன் மில்லர்'. ஜனவரி 12 அன்று திரைக்கு வரவுள்ள, இப்படத்தின் Pre Release Event விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில், படக்குழுவினர், பத்திரிக்கையாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், ஆயிரக்கணக்கான ரசிகர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

இவ்விழாவினில்..

இயக்குநர் மாரி செல்வராஜ் பேசியதாவது..,
இந்த மேடையில் இருப்பது, மகிழ்ச்சியாக இருக்கிறது. தனுஷ் சார் பற்றி பேசிக்கொண்டே இருக்கலாம். கேப்டன் மில்லர் விஷுவல் பார்த்தால், எனக்குப் பயமாக இருக்கிறது. அடுத்த படத்தில் அவரை வைத்து என்ன செய்யப்போகிறேன் எனத் தெரியவில்லை. கர்ணன் முடிந்தவுடன், அவருடன் வேலை பார்க்க சைன் பண்ணினேன். ஆனால் எனக்கு வேறு புராஜக்ட் வந்த போது, என்னை அன்புடன் அனுப்பி வைத்தார். அதற்காக அவருக்கு நன்றி. கர்ணன் செய்யும் போதே, கேப்டன் மில்லர் ஒப்பந்தமாகிவிட்டார். கர்ணனை விட இதில் பயங்கரமாக வேலை பார்த்திருக்கிறார். அடுத்த படத்தில் இதை விட, உங்களுக்குப் பெரிய தீனி தர முயற்சிக்கிறேன். இப்படத்தில் என் நண்பர்கள் பலர் வேலைபார்த்துள்ளனர், அனைவருக்கும் வாழ்த்துக்கள். தூத்துக்குடியில் வெள்ளம் வந்தபோது நான் அங்கு போயிருந்தேன். அப்போது முதல் ஆளாக எனக்குக் கால் பண்ணி விசாரித்தவர் தனுஷ் சார். தனுஷ் சாரிடம் எப்போதும் நல்ல நட்பு இருக்கிறது. அவர் எப்போதும் சினிமாவை கவனித்துக்கொண்டிருக்கிறார். நிச்சயம் கேப்டன் மில்லர் மிகப்பெரிய வெற்றி பெறும் நன்றி.

Captain Miller Audio Launch

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது..,
இது மிகப்பெரிய படம். தனுஷ் சாருடன் இரண்டு தம்பிகள் அமர்ந்திருக்கிறார்கள், அவர்களைப் பார்த்தால் மகன்கள் மாதிரி தெரியவில்லை. அவர்களும் விரைவில் ஹீரோவாக வர வேண்டும். சத்ய ஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம், அருண் மற்றும் இந்த டீமை நம்பி, மிகப்பெரிய படைப்பைத் தந்திருக்கிறார்கள். விஷுவல்கள் சூப்பராக இருக்கிறது. கண்டிப்பாக இப்படம் பொங்கலுக்கு பெரிய வெற்றிப்படமாக இருக்கும்.

பாடலாசிரியர் உமாதேவி பேசியதாவது...
கேப்டன் மில்லர் நான் தனுஷ் சாருக்கு எழுதியிருக்கும் ரெண்டாவது பாடல். பட்டாஸ் படத்தில் புது சூரியன் பாடல் எழுதினேன், அவரை மனதில் வைத்துத்தான் எழுதினேன். இரண்டு பாடலும் சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தந்த வாய்ப்பு. இப்படத்தில் கோரனாரு என்ற பாடல் எழுதியிருக்கிறேன். கோரனாரு என்றால் யானை பலம் கொண்டவர் என்று அர்த்தம். இந்தப் பாடலுக்காக ஜீவி சாருக்கு நன்றி. இந்த வாய்ப்பை தந்த இயக்குநர், தயாரிப்பாளர் ஆகியோருக்கும் நன்றி.

பாடலாசிரியர் விவேக் பேசியதாவது..
தன் கலைப்படைப்பு மூலம், எனக்கு நான் ராஜாவாக வாழுறேன், என வாழ்பவர் தனுஷ் சார். இளையராஜா சார் போன்ற ஆளுமைகள் கோலோச்சிய காலத்தில் நாம் இல்லை என்ற வருத்தம் எனக்கு இருக்கும். ஆனால் தனுஷ் சாரும் மிகப்பெரிய ஆளுமை தான், அவர் காலத்தில் அவருடன் இணைந்து பல படங்களில் பணியாற்றுவது, மிகப்பெரிய பெருமை. ஜீவி சார் மிகப்பெரிய சாதனைகளைத் தொடர்ந்து செய்து வருகிறார். அவருடன் வேலை பார்த்தது மகிழ்ச்சி. அருண் மிகப்பெரிய உழைப்பாளி. அவருக்கு என் வாழ்த்துக்கள். இப்படத்தில் வேலைபார்த்த அனைவருக்கும் நன்றி.

நடிகை பிரியங்கா மோகன் பேசியதாவது..
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள். கேப்டன் மில்லர் எனக்கு ரொம்ப ஸ்பெஷலான படம். அருண் சார் கதை சொன்ன போதே, ரொம்ப எக்ஸைட்டாக இருந்தது. எனக்கு ஹிஸ்டாரிகல் படங்கள் என்றாலே பிடிக்கும், அப்படிப்பட்ட படத்தில் நான் இருப்பது மகிழ்ச்சி. இப்படத்திற்காக அந்த காலகட்டத்தைக் கொண்டு வர, எல்லோரும் கடுமையாக உழைத்துள்ளனர். எனக்குத் துப்பாக்கி பிடிக்கவே தெரியாது, என்னை ஆக்சன் செய்ய வைத்திருக்கிறார்கள். எல்லோருக்கும் என் நன்றியைச் சொல்ல வேண்டும். இவ்வளவு பெரிய படத்தை புரடியூஸ் பண்ணுவது மிகப்பெரிய வேலை, சத்ய ஜோதி பிலிம்ஸ் தந்த ஆதரவுக்கு நன்றி. ஜீவி சார் அட்டகாசமான இசையைத் தந்துள்ளார். சிவராஜ்குமார் சாருடன் இணைந்து நடித்தது பெருமை. அருண் உண்மையில் செம்ம ஜாலியானவர், கடுமையாக உழைத்திருக்கிறார். நான் தனுஷ் சாருக்கு பெரிய ஃபேன், அவருடன் சேர்ந்து நடித்தது சந்தோஷம். அவர் நடிப்பைப் பார்த்து மிரண்டிருக்கிறேன். இந்தப்படத்தில் வாய்ப்பு தந்ததற்கு நன்றி. இந்தப்படம் ரசிகர்களுக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருக்கும்.

இப்படத்தில் தனுஷ், பிரியங்கா மோகன் முதன்மைப்பாத்திரத்தில் நடிக்க, சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உட்பட பல முன்னணி நட்சத்திரங்கள் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

"கேப்டன் மில்லர்" படத்தினை சத்யஜோதி பிலிம்ஸ் T.G.தியாகராஜன் வழங்குகிறார் செந்தில் தியாகராஜன் மற்றும் அர்ஜுன் தியாகராஜன் தயாரிக்கின்றனர். இப்படத்தை G.சரவணன் மற்றும் சாய் சித்தார்த் இணை தயாரிப்பு செய்கின்றனர். ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு, மதன் கார்க்கி வசனம் எழுதியுள்ளார். இப்படம் பொங்கல் விருந்தாக ஜனவரி 12 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X