Blue Sattai Maran: ”என்னையா படம் எடுத்து வச்சிருக்கீங்க..?” கேப்டன் மில்லர் ப்ளூ சட்டை விமர்சனம்
சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்துக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதேநேரம் இந்தப் படத்துக்கு ப்ளூ சட்டை மாறன் நெகட்டிவான விமர்சனம் கொடுத்துள்ளார். கதை, திரைக்கதை இல்லாமல் மேக்கிங்கை மட்டுமே நம்பி கேப்டன் மில்லர் படத்தை எடுத்துள்ளனர் என பங்கமாக கலாய்த்துள்ளார். கேப்டன் மில்லர் படத்திற்கான ப்ளூ சட்டை மாறன் விமர்சனத்தை பார்க்கலாம்.
கேப்டன் மில்லர் ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் நேற்று வெளியானது. இந்தப் படம் குறித்து விமர்சனம் செய்துள்ள ப்ளூ சட்டை மாறன், தனுஷையும் இயக்குநர் அருண் மாதேஸ்வரனையும் ட்ரோல் செய்துள்ளார். அதாவது, “இது ஒரு வெள்ளைக்காரன் காலத்துல நடக்குற பீரியட் படம். அதுக்காக நல்ல செலவு பண்ணி பிரம்மாண்டமாக எடுத்துருக்காங்க, மேக்கிங், கேமரா ஒர்க், மியூசிக், எடிட்டிங் என எல்ல டெக்னிக்கல் விஷயங்களும் நல்லா இருந்தது. தனுஷ் ரொம்பவே நல்லா நடிச்சிருந்தாரு, மத்த நடிகர்களும் நல்லா நடிச்சிருக்காங்க. இதுமட்டும் ஒரு படத்துக்கு போதுமா... ஒரு நல்ல கதை வேண்டாமா..” என கேள்வி எழுப்பியுள்ளார் ப்ளூ சட்டை மாறன்.

”கதைன்னு பார்த்தா... ஒரு சமஸ்தானத்துல இருக்குற சின்ன கிராமத்துல தான் கதையே ஆரம்பிக்குது. அங்க 600 வருசம் பழமையான சிலைய பொக்கிஷமா பாதுகாத்து வர்றாங்க. அந்த சிலைய வெள்ளைக்காரங்க கைப்பற்றிட்டு போய்டுறாங்க. திரும்ப அத வெள்ளைக்காரங்க கிட்ட இருந்து திருப்பி எடுக்குறதுக்காக, சந்த சமஸ்தானத்து ராஜா ஹீரோகிட்ட இந்த பொறுப்ப கொடுத்து கோர்த்துவிட்டுறாரு. அதுகப்புறம் என்னாச்சுங்குறது தான் இந்தப் படத்தோட கதை.”
“கதை எப்படி இருந்தாலும் திரைக்கதை மூலம் எந்தவொரு படத்தையும் ஒப்பேத்திடலாம். ஆனா இந்த படத்துல திரைக்கதைன்னு ஒன்னு கிடையவே கிடையாது... கதையும் கிடையாது... கதையும் இல்லாம திரைக்கதையும் இல்லாமல் வெறும் பிரம்மாண்டத்தையும் மேக்கிங்கையும் மட்டும் வச்சிட்டு என்னத்த பண்றது” என கலாய்த்துள்ளார். அதாவது “குற்றாலத்துக்கு போய்ட்டு குழாய் தண்ணில குளிச்சிட்டு வர்ற மாதிரி தான் இருக்கு” கேப்டன் மில்லரை பதம் பார்த்துள்ளார்.
மேலும், படத்தில் ஸ்ட்ராங்கான வில்லன் இல்லை. அதேபோல், மனதில் நிற்கும்படி எந்த கேரக்டரும் இல்லை. எல்லா கேரக்டரும் ஏனோதானோ என வந்து போய்ட்டே இருக்கு எனவும், படத்தில் வர்றவங்கலாம் போராளிகளா, கொள்ளைகாரங்களா என்பது எங்கேயும் ரிஜிஸ்டர் ஆகவே இல்லை. வர்றவன் போறவன் எல்லாம் துப்பாக்கிய எடுத்து சுட்டுட்டு இருப்பதாக கூறியுள்ளார். அதேபோல் கேப்டன் மில்லர் பட செட்டுக்காக வெல்டிங் வேலைக்கு வந்தவனையும் நடிக்க வச்சிருக்கானுங்க. அப்படி ஒரு கேரக்டர் அதே வெல்டிங் கிளாஸுடனே சுத்திட்டு இருக்கான்.
திடீர்ன்னு பார்த்தா அவனும் ஒரு துப்பாக்கிய எடுத்து சுட்டுட்டு இருக்கான். அதுக்கும் தியேட்டர்ல அப்படி விசில் பறக்குது. நியாயமா பார்த்தா அவன் தான் கேப்டன் மில்லரா இருக்கணும் எனவும் விமர்சித்துள்ளார். அதேபோல் சமஸ்தானத்தின் ராஜா கேரக்டர், யாராக இருந்தாலும் ஊரில் இருக்கும் கோயிலுக்கு பின்னாடி நின்று பேசும் காட்சி ஆகியவை பற்றியும் ட்ரோல் செய்துள்ளார். சாணிக்காயிதம் படத்தில் ஒரு ஓட்டை வழியாக சில காட்சிகளை படமாக்கியிருந்தார் அருண் மாதேஸ்வரன்.
அதனை குறிப்பிட்டுள்ள ப்ளூ சட்டை மாறன், கேப்டன் மில்லர் படத்திலேயே மிகப் பெரிய ஓட்டை இருப்பதாகவும், சிவராஜ்குமார் தான் இருப்பதிலேயே ரொம்ப பாவம் எனவும் கூறியுள்ளார். படத்தில் மொத்தமே மூன்றே காட்சிகளில் மட்டும் தான் சிவராஜ்குமார் வருவதாகவும், அதுவும் கூட அவர் ஏன் வந்தார் எதுக்கு வந்தார்ன்னு தெரியல. சிவராஜ்குமார் கோலிவுட்ல நடிக்க வந்தது வடிவேலு காமெடி மாதிரி ஆகிடக் கூடாது. அவரு சேர்த்து வச்ச பேரு, அவங்க அப்பா சேர்த்து வச்ச பேரு எல்லாத்தையும் ஒரே படத்துல காலி பண்ணிவிட்டுருவாங்க எனவும் கலாய்த்துள்ளார்.
அதேபோல், 1930களில் வெள்ளைக்காரங்களே சாதாரண துப்பாக்கி வச்சு தான் சுட்டுட்டு இருப்பாய்ங்க. ஆனா தனுஷ் & குரூப் இப்ப இருக்குறவிட அட்வான்ஸ் ரக ஆயுதங்கள் வச்சு சுட்டு தள்ளுராய்ங்க. அப்புறம் தனுஷை நடக்கவிட்டு நிறைய ஷார்ட்ஸ் எடுத்து அதை படம் முழுக்க பயன்படுத்தி இருப்பதாகவும் விமர்சித்துள்ளார். படத்துல ஒரே நல்ல விஷயம், கோயிலில் குறிப்பிட்ட ஜாதியினருக்கு அனுமதி மறுக்கப்படுகிறது என்பதை பேசுவதுடன், அந்த கோயிலுக்குள் செல்வதாகவும் காட்டியது ஆறுதல் எனக் கூறியுள்ளார்.
மொத்தத்தில் கேப்டன் மில்லர் படம் பற்றி கூறிய ப்ளூ சட்டை மாறன், இங்லீஷ், கொரியன் மூவிஸ்லாம் பார்த்துட்டு அதுல இருந்து ஒன்னு ரெண்டு சீன் எடுத்து ஒரு படத்தை இயக்கி வச்சிருக்கார் அருண் மாதேஸ்வரன். மேக்கிங்ல வித்தை காட்டுறேன்னு சொல்லி இப்படி கேப்டன் மில்லர் மாதிரி படத்த எடுத்து வச்சிருக்காங்க என ப்ளூ சட்டை மாறன் விமர்சனம் செய்துள்ளார்.


Click it and Unblock the Notifications











