Captain Miller: கேப்டன் மில்லர் ஆடியோ லான்ச்... தனுஷின் குட்டி ஸ்டோரி..? அடுத்த சம்பவம் லோடிங்!
சென்னை: தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள திரைப்படம் கேப்டன் மில்லர்.
அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது.

டிசம்பர் மாதம் வெளியாகவிருந்த கேப்டன் மில்லர் படத்தின் ரிலீஸை பொங்கலுக்கு மாற்றியுள்ளது படக்குழு.
இந்நிலையில், கேப்டன் மில்லர் ஆடியோ லான்ச் இந்த மாதம் இறுதியில் நடைபெறவுள்ளது.
கேப்டன் மில்லர் ஆடியோ லான்ச்
தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணியில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர், அடுத்தாண்டு பொங்கலுக்கு ரிலீஸாகிறது. முன்னதாக இந்தப் படம் டிசம்பர் 15ம் தேதி வெளியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால், திடீரென பொங்கல் ரேஸில் களமிறங்கும் என படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே பொங்கலுக்கு லால் சலாம், அயலான் படங்கள் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.
சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தை ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ளார். அதேபோல் அயலான் படத்தில் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். பொங்கல் ரேஸில் சூப்பர் ஸ்டார் ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் மூவரும் ஒன்றாக களமிறங்கவுள்ளது ரசிகர்களிடம் பெரிய ஹைப் கொடுத்துள்ளது. இதில் எந்த படம் சூப்பர் ஹிட் அடிக்கும் என்ற பஞ்சாயத்து இப்போதே தொடங்கிவிட்டது.
இதனையடுத்து கேப்டன் மில்லர் படத்தின் ப்ரொமோஷன் நிகழ்ச்சிகளை இந்த மாதம் இறுதியில் இருந்தே தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளதாம். அதன்படி, முதலில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா நவம்பர் இறுதியில் நடைபெறும் என சொல்லப்படுகிறது. சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ள இந்த விழாவுக்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக செய்யப்பட்டு வருகின்றன.
இதில் தனுஷ், சிவராஜ்குமார், இயக்குநர் அருண் மாதேஸ்வரன் உள்ளிட்ட கேப்டன் மில்லர் படக்குழுவினர் கலந்துகொள்ள இருக்கின்றனர். ஜெயிலர் ஆடியோ லான்ச், லியோ சக்சஸ் மீட் இரண்டுமே கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் குட்டி ஸ்டோரி சொல்வாரா என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில், பிரபலங்கள் சிலர் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளலாம் என சொல்லப்படுகிறது.
தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் நடித்துள்ள கேப்டன் மில்லர், பீரியட் ஜானரில் ஆக்ஷன் திரைப்படமாக உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்தின் வெற்றியை பொறுத்து, கேப்டன் மில்லர் 2, கேப்டன் மில்லர் 3 என மேலும் இரண்டு பாகங்கள் உருவாகும் என இயக்குநர் அருண் மாதேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











