பொங்கல் ரேஸில் முன்னணியில் இருக்கும் கேப்டன் மில்லர்... லால் சலாம், அயலானுக்கு காத்திருக்கும் சவால்

சென்னை: பொங்கல் ரிலீஸில் தனுஷின் கேப்டன் மில்லர் முன்னணியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் சிவகார்த்திகேயனின் அயலான், ரஜினி கேமியோ ரோலில் நடித்துல்ல லால் சலாம் படங்களுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

Captain Miller: Captain Miller is releasing before Lal Salaam and Ayalaan

அதிக எதிர்பார்ப்பில் தனுஷின் கேப்டன் மில்லர்
2024ம் ஆண்டு பொங்கல் ரேஸில் லால் சலாம், கேப்டன் மில்லர், அயலான் படங்கள் மோதவுள்ளன. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினி கேமியோ ரோலில் நடித்துள்ள லால் சலாம் படத்தை, தனுஷின் முன்னாள் மனைவி ஐஸ்வர்யா இயக்கியுள்ளார். அதேபோல், அயலான் படத்தில் தனுஷின் நட்பு பட்டியலில் இருந்த சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடித்துள்ளார். தற்போது இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர் பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. இந்தப் படத்தின் டீசர் வெளியாகி மிரட்டியிருந்தது. அதனைத் தொடர்ந்து விரைவில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா நடைபெறவுள்ளது. அப்போது படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தப் படம் ஜனவரி 11ம் தேதி வெளியாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

லால் சலாம், அயலான் படங்களும் பொங்கலுக்கு வெளியாக உள்ளதால், 11ம் தேதியே கேப்டன் மில்லரை ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாம். இதனால், லால் சலாம், அயலான் படங்களுக்கு சிக்கல்கள் இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர். இதனிடையே அயலான் திரைப்படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேப்டன் மில்லர் 11ம் தேதியும், அயலான் 12ம் தேதியும் என அடுத்தடுத்த நாட்களில் இரண்டு படங்களும் வெளியாகின்றன. இந்நிலையில், ரஜினியின் லால் சலாம் கண்டிப்பாக பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. ஆனால், இந்தப் படத்தின் பேட்ச்வொர்க் சில தினங்களுக்கு முன்னர் தான் முடிவுக்கு வந்துள்ளது. இதனால் இன்னும் ரிலீஸ் தேதியை ஃபைனல் செய்ய முடியாமல் உள்ளதாம் லைகா நிறுவனம்.

தனுஷின் கேப்டன் மில்லர் 11ம் தேதியே வெளியாவதால், பாக்ஸ் ஆபிஸில் சிறப்பான ஓபனிங் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம் அயலான் படத்துக்கும் அதிக எதிர்பார்ப்புகள் இருப்பதால், இதுவும் பாக்ஸ் ஆபிஸில் சம்பவம் செய்யும் எனக் கூறப்படுகிறது. அதேநேரம் லால் சலாம் படத்தின் ரிலீஸ் தேதியை ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X