Captain Miller: தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக கேப்டன் மில்லர் டீசர்... ரசிகர்கள் அலப்பறை ஸ்டார்ட்டிங்

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ள கேப்டன் மில்லர் டீசருக்காக ரசிகர்கள் ரொம்பவே எதிர்பார்த்துள்ளனர்.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் ரிலீஸ் தேதி, நேரம் ஆகியவற்றை படக்குழு அறிவித்துள்ளது.

 Captain Miller: Captain Miller Teaser Released on Dhanushs Birthday at midnight

தனுஷ் பிறந்தநாளில் கேப்டன் மில்லர் டீசர்: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர், அவரது 50வது படம், இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் படம் ஆகியவற்றில் நடித்து வருகிறார். இதில் கேப்டன் மில்லர் படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் உருவாகியுள்ளது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் டீசர் வரும் 28ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. தனுஷின் பிறந்தநாள் ஸ்பெஷலாக இது வெளியாவதால், 28ம் தேதி நள்ளிரவு 12.01 மணிக்கு வெளியாகும் என தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் தனுஷ் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். கடந்த வாரம் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு கங்குவா க்ளிம்ப்ஸ் வீடியோ வெளியானது.

தற்போது அதே ஸ்டைலில் தனுஷின் கேப்டன் மில்லர் டீசர் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. அதேநேரம் ஜூலை 28ம் தேதியில் தான் சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவும் நடைபெறுகிறது. தனுஷ் பிறந்தநாளில் ரஜினியின் ஜெயிலர் இசை வெளியீட்டு, கேப்டன் மில்லர் டீசர் அடுத்தடுத்து இரண்டு சம்பவங்கள் அரங்கேறவுள்ளன. அதேபோல், தனுஷ் பிறந்தநாளை கேப்டன் மில்லர் டீசருடன் கொண்டாட அவரது ரசிகர்களும் ரெடியாகிவிட்டனர்.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள கேப்டன் மில்லர் டீசர் அப்டேட் போஸ்டரில் தனுஷின் லுக் வெறித்தனமாக உள்ளது. பெரிய மெஷின் கன்னுடன் ஆக்ரோஷமாக மாஸ் காட்டுகிறார் தனுஷ். இதனால் கேப்டன் மில்லரில் தரமான ஆக்‌ஷன் ட்ரீட் இருப்பது கன்ஃபார்மாகியுள்ளது. கேப்டன் மில்லரில் தனுஷுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X