Captain Miller: மகன்களுடன் என்ட்ரி... கேப்டன் மில்லர் விழாவில் ரசிகர்களுக்கு வைப் கொடுத்த தனுஷ்!

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இதில் தனுஷ் தனது மகன்களுடன் கலந்துகொண்ட வீடியோ வைரலாகி வருகிறது. அதேபோல் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், நாயகி ப்ரியா மோகன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

மகன்களுடன் என்ட்ரியான தனுஷ்: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வரும் 12ம் தேதி வெளியாகிறது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்‌ஷன் ஜானரில் ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியுள்ளது. தனுஷுடன் ப்ரியங்கா மோகன், சிவராஜ்குமார், சந்தீப் கிஷன் உள்ளிட்ட பலர் கேப்டன் மில்லரில் நடித்துள்ளனர்.

 Captain Miller: Dhanush entered the Captain Miller audio launch with his sons

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்றது. பிரம்மாண்டமாக நடைபெறும் இந்த விழாவில் தனுஷ் வெள்ளை சட்டை அணிந்து கலந்துகொண்டார். தனுஷுடன் அவரது மகன்கள் யாத்ரா, லிங்கா ஆகியோரும் கலந்துகொண்டது ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்ஸாக அமைந்தது.

அதேபோல், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமாரும் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் செம்ம கெத்தாக என்ட்ரி கொடுத்தார். கடந்தாண்டு வெளியான ஜெயிலர் படத்தில் ரஜினியின் தளபதியாக நடித்து மாஸ் காட்டியிருந்தார் சிவராஜ்குமார். மொத்தமே இரண்டே சீன்களில் ஒட்டுமொத்த கோலிவுட் ரசிகர்களுக்கும் வைப் கொடுத்திருந்தார். அதுவரையிலும் தமிழில் அதிகம் பிரபலமாகாத சிவராஜ்குமார், கேப்டன் மில்லரில் தெறிக்கவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

 Captain Miller: Dhanush entered the Captain Miller audio launch with his sons

முன்னதாக கேப்டன் மில்லர் நாயகி ப்ரியங்கா மோகன், இயக்குநர் அருண் மாதேஸ்வரன், இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் உள்ளிட்ட படக்குழுவினர் விழா அரங்கத்திற்கு வருகை தந்தனர். அவர்களுக்கும் ரசிகர்கள் உற்சாகமாக வரவேற்பு கொடுத்திருந்தனர். ரஜினி, விஜய்க்குப் பின்னர் இவ்வளவு பெரிய ரசிகர்கள் கூட்டம் தனுஷுக்கு கூடியது கோலிவுட்டையே திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

 Captain Miller: Dhanush entered the Captain Miller audio launch with his sons

இந்நிலையில் கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவில் தனுஷின் குட்டி ஸ்டோரிக்காக ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் உள்ளனர். நேரு ஸ்டேடியம் உள்ளே வந்ததும் ரசிகர்களை நோக்கி கையசைத்த தனுஷ் தனது மகன்களுக்கு நடுவே அமர்ந்துகொண்டார். இந்நிகழ்ச்சியில் இயக்குநர் மாரி செல்வராஜ்ஜும் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X