Captain Miller: விரைவில் கேப்டன் மில்லர் ஸ்பெஷல் சம்பவம்... டப்பிங்கை தொடங்கிய தனுஷ்..?

சென்னை: தனுஷ் தற்போது தனது 50வது படத்தை இயக்கி நடித்து வருகிறார். முன்னதாக அவர் அருண் மாதேஸ்வரன் இயக்கிய கேப்டன் மில்லர் படத்தில் நடித்துள்ளார்.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம், டிசம்பர் 15ம் தேதி வெளியாகும் என படக்குழு அறிவித்துவிட்டது. இதனையடுத்து கேப்டன் மில்லர் படத்துக்காக தனுஷ் டப்பிங் கொடுக்க தொடங்கிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

 Captain Miller: Dhanush has started dubbing for Captain Miller film

கேப்டன் மில்லர் ஸ்பெஷல் சம்பவம் லோடிங் : தனுஷ் தற்போது ஒரே நேரத்தில் மூன்று படங்களில் பிஸியாக காணப்படுகிறார். இந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கும் Tere Ishk Mein, தமிழில் கேப்டன் மில்லர் என இரண்டு படங்களில் நடித்துள்ளார். அதேநேரம் அவரே இயக்கி நடிக்கும் D 50 படத்தின் படப்பிடிப்பும் வேகமாக நடைபெற்று வருகிறது. இதில் கேப்டன் மில்லர் படத்துக்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள கேப்டன் மில்லர், மிகப் பிரம்மாண்டமாக உருவாகியுள்ளது. மேலும், ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் பீரியட் படமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர், கோலிவுட்டையே தெறிக்கவிடப் போவதாகவும் சொல்லப்படுகிறது. மேக்கிங், ஆக்‌ஷன் சீன்ஸ் என கேப்டன் மில்லர் படத்தில் ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து செதுக்கியுள்ளாராம் இயக்குநர் அருண் மாதேஸ்வரன்.

அருண் மாதேஸ்வரனின் உழைப்பை பார்த்து பிரமித்துப் போன தனுஷ், அவரது இயக்கத்தில் இன்னொரு படத்திலும் நடிக்க ஓக்கே சொல்லிவிட்டாராம். இந்நிலையில், தனுஷ் பிறந்தநாள் ஸ்பெஷலாக, கேப்டன் மில்லர் டீசர் வெளியானது. மேலும், படத்தின் ரிலீஸ் தேதியையும் படக்குழு கன்ஃபார்ம் செய்துள்ளது. அதன்படி, டிசம்பர் 15ம் தேதி கேப்டன் மில்லர் திரையரங்குகளில் ரிலீஸாகிறது. இதனால், இனிவரும் நாட்களில் கேப்டன் மில்லர் அப்டேட்கள் வரிசைக் கட்டி வரவுள்ளதாம்.

டீசருக்குப் பின்னர் கேப்டன் மில்லர் படத்தின் ஸ்பெஷல் சம்பவமாக, ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியாகும் என சொல்லப்படுகிறது. ஜிவி பிரகாஷ் இசையில் மிரட்டலாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் சிங்கிள், தனுஷ் ரசிகர்களுக்கு தரமான ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுமட்டும் இல்லாமல், இந்தப் படத்திற்காக தனுஷ் டப்பிங் வேலைகளையும் தொடங்கிவிட்டாராம்.

இதனால், கேப்டன் மில்லர் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் வேகமெடுத்துள்ளதாம். தனுஷை தொடர்ந்து மற்ற நடிகர்களும் டப்பிங் கொடுக்கவுள்ளதாகத் தெரிகிறது. கேப்டன் மில்லரில் தனுஷுடன் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர், ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். ஜெயிலர், லியோ படங்களுக்குப் பின்னர் அதிக ஹைப் கொடுக்கும் படமாக கேப்டன் மில்லர் பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X