Captain Miller: முதலில் ஃபர்ஸ்ட் லுக் அடுத்து டீசர்... கேப்டன் மில்லர் அப்டேட் கொடுத்த தனுஷ்

சென்னை: தனுஷ் தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் பீரியட் ஜானரில் ஆக்‌ஷன் படமாக உருவாகி வருகிறது.

பிரம்மாண்டமான பட்ஜெட்டில் உருவாகும் இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தின் இரண்டு தரமான அப்டேட்களை படக்குழு தற்போது அறிவித்துள்ளது.

 Captain Miller: Dhanushs Captain Miller First Look Poster and Teaser Update

கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் & டீசர்: தனுஷ் நடிப்பில் கடைசியாக வாத்தி திரைப்படம் வெளியாகியிருந்தது. தமிழ், தெலுங்கு மொழிகளில் ரிலீஸான இந்தப் படம் 100 கோடி ரூபாய் வசூலித்தது. வாத்தி வெளியாகும் முன்பே கேப்டன் மில்லர் படப்பிடிப்பில் கலந்துகொண்டார் தனுஷ். இந்தப் படம் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகிறது. முக்கியமாக தனுஷின் லுக் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன் மில்லர் படத்தின் படப்பிடிப்பு தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. பீரியட் ஜானர் படம் என்பதால் வனப் பகுதிகளில் செட் போட்டு எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. தனுஷ் ரசிகர்களுக்கு தரமான ஆக்‌ஷன் ட்ரீட்டாக உருவாகி வரும் கேப்டன் மில்லர், தீபாவளிக்கு ரிலீஸாகும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்து படக்குழு தரப்பில் இருந்து இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதனிடையே சில வாரங்களுக்கு முன்னர் தனுஷின் லுக்குடன், கேப்டன் மில்லர் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து தற்போது ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் வெளியீடு குறித்து படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, கேப்டன் மில்லர் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் மாதம் வெளியாகவுள்ளது. அதன்பின்னர் கேப்டன் மில்லர் டீசர் ஜூலையில் வெளியாகும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது. இதனால் கேப்டன் மில்லர் என்ற ஹேஷ்டேக் டிவிட்டரில் ட்ரெண்டாகி வருகிறது.

 Captain Miller: Dhanushs Captain Miller First Look Poster and Teaser Update

மேலும், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், டீசர் இரண்டும் அடுத்தடுத்து வெளியாகவுள்ளதால், கேப்டன் மில்லர் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. கேப்டன் மில்லர் டீசரில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. அதன்படி, கேப்டன் மில்லர் தீபாவளிக்கு தான் கண்டிப்பாக வெளியாகும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனால் தனுஷ் ரசிகர்கள் இப்போதே கேப்டன் மில்லர் படத்தை கொண்டாட ரெடியாகிவிட்டனர்.

ஏற்கனவே சிவகார்த்திகேயனின் அயலான், கார்த்தியின் ஜப்பான் படங்கள் தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளன. கடந்தாண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயனின் பிரின்ஸ், கார்த்தியின் சர்தார் திரைப்படங்கள் களமிறங்கின. இதில், கார்த்தியின் சர்தார் தான் பாக்ஸ் ஆபிஸில் ஹிட் அடித்தது. இந்நிலையில், இந்தாண்டு அயலான், சர்தார், கேப்டன் மில்லர் வெளியானால் அது ரசிகர்களுக்கு ட்ரிபிள் ட்ரீட்டாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X