Captain Miller: வெளியானது கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள்... அடக்கி வாசிக்கும் அசுரன் தனுஷ்!

சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாகிறது. முன்னதாக இந்தப் படத்தை டிசம்பர் 15ம் தேதி வெளியிட படக்குழு முடிவு செய்திருந்தது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள் தற்போது வெளியானது.

வெளியானது கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள்
தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் படத்தை அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ளார். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர் பொங்கல் ரேஸில் தெறிக்க விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படம் மூலம் நீண்ட இடைவேளைக்குப் பின்னர் தனுஷ் வெறித்தனமான ஆக்‌ஷன் மோடில் களமிறங்கவுள்ளார். இதனால் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு காணப்படுகிறது.

 Captain Miller: Dhanush Starrer Captain Miller second single was released now

தனுஷுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் இந்தப் படத்தில் நடித்துள்ளனர். பீரியட் ஜானரில் பக்கா ஆக்‌ஷன் மூவியாக உருவாகியுள்ளது கேப்டன் மில்லர். அருண் மாதேஸ்வரனின் மேக்கிங் பிடித்துவிட்டதால் மீண்டும் அவருடன் ஒரு படத்தில் கமிட்டாகியுள்ளார் தனுஷ். அது கேப்டன் மில்லர் செகண்ட் பார்ட்டாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

இந்நிலையில் கேப்டன் மில்லர் படத்தில் இருந்து இரண்டாவது பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ஜிவி பிரகாஷ் இசையில் 'உன் ஒளியிலே' எனத் தொடங்கும் இந்தப் பாடலை ஷான் ரோல்டன் பாடியுள்ளார், கபேர் வாசுகி பாடல் வரிகளை எழுதியுள்ளார். மென் சோகப் பாடலாக உருவாகியுள்ள இந்தப் பாடல் ரசிகர்களிடம் கவனம் ஈர்த்துள்ளது. அதேபோல், பாடலின் பின்னணியில் வரும் விஷுவலும் படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.

தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி மொழிகளிலும் கேப்டன் மில்லர் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் கேப்டன் மில்லர் ட்ரெய்லர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். அதேபோல், கேப்டன் மில்லர் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளதாம். அதில் தனுஷ் என்ன பேசுவார் என்பதே அவரது ரசிகர்களின் கவலையாக உள்ளது.

அதேநேரம் தனுஷும் ரஜினி, விஜய் ஸ்டைலில் குட்டி ஸ்டோரி சொல்லுவாரா எனவும் ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். இதனிடையே பொங்கல் ரேஸில் இருந்து ரஜினியின் லால் சலாம் படம் விலகியதாக சொல்லப்படுகிறது. கேப்டன் மில்லர் படத்துக்காக தான் லால் சலாம் ரிலீஸ் தள்ளிப் போவதாக தகவல்கள் வெளியாகின. அதாவது தனுஷுக்காக ஐஸ்வர்யா ரஜினிகாந்த் விட்டுக் கொடுப்பதாக சொல்லப்பட்டது. ஆனால் அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை எனவும், ஜனவரி 26ம் தேதி சிங்கிளாக களமிறங்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X