Captain Miller: கேப்டன் மில்லர் ட்ரெய்லர் லோடிங்... அப்டேட்டுடன் களத்தில் இறங்கிய தனுஷ்!
சென்னை: தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகிறது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் குறித்து தனுஷ் அப்டேட் கொடுத்துள்ளார். கேப்டன் மில்லர் ட்ரெய்லர் லோடிங் என தனுஷ் போட்டுள்ள ட்வீட் ட்ரெண்டாகி வருகிறது.
கேப்டன் மில்லர் ட்ரெய்லர் லோடிங்: தனுஷின் கேப்டன் மில்லர் திரைப்படம் பொங்கலுக்கு வெளியாகவுள்ளது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. தனுஷுடன் கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், சந்தீப் கிஷன், பிரியங்கா மோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தனுஷ் - அருண் மாதேஸ்வரன் கூட்டணி முதன்முறையாக கேப்டன் மில்லர் படத்தில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பீரியட் ஜானரில் ஆக்ஷன் த்ரில்லர் மூவியாக உருவாகியுள்ள கேப்டன் மில்லர், தனுஷ் ரசிகர்களுக்கு செம்ம ட்ரீட்டாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கேப்டன் மில்லர் டீசர் வெளியாகி படம் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருந்தது. அருண் மாதேஸ்வரனின் முந்தைய படங்களான ராக்கி, சாணிக்காயிதம் ஆகியவையும் ராவான ஆக்ஷன் காட்சிகளுடன் ரத்தம் தெறிக்க தெறிக்க உருவாகியிருந்தது.
கேப்டன் மில்லரும் அதேபோன்ற ஒரு படமாக தான் இருக்கும் என சொல்லப்படுகிறது. டீசரை தொடர்ந்து ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியான நிலையில், அடுத்து கேப்டன் மில்லர் ட்ரெய்லர் வெளியாகவுள்ளதாம். இதனை தனுஷே தனது டிவிட்டரில் தெரிவித்துள்ளார். விரைவில் கேப்டன் மில்லர் ட்ரெய்லர்... பொங்கல் ரிலீஸ் என ட்வீட் போட்டுள்ள தனுஷ், செம்ம ஸ்டைலிஷான போஸ்டரையும் ஷேர் செய்துள்ளார்.
அதில், பைக் மீது படுத்திருக்கும் தனுஷ், கால் மேல கால் போட்டு செம்ம ஸ்டைலிஷாக கெத்து காட்டுகிறார். போஸ்டரிலேயே தெறிக்கவிட்டுள்ள தனுஷ், ட்ரெய்லரில் இன்னும் அதகளம் செய்திருப்பார் என எதிர்பார்க்கலாம். தனுஷ் கொடுத்துள்ள அப்டேட் படி, இன்னும் ஓரிரு தினங்களில் கேப்டன் மில்லர் ட்ரெய்லர் வெளியாகலாம் என சொல்லப்படுகிறது.
அதனைத் தொடர்ந்து கேப்டன் மில்லர் ஆடியோ லான்ச், ஜனவரி முதல் வாரம் நேரு ஸ்டேடியத்தில் நடைபெறும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பொங்கலுக்கு வெளியாகும் கேப்டன் மில்லருக்குப் போட்டியாக, ரஜினியின் லால் சலாம், சிவகார்த்திகேயனின் அயலான் படங்களும் ரிலீஸாகின்றன. இதனால் பாக்ஸ் ஆபிஸில் யார் கெத்து என கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











