Captain Miller Box Office Day 6: கேப்டன் மில்லர் 6வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவுன்னு தெரியுமா?
சென்னை: தனுஷின் கேப்டன் மில்லர் அதிக எதிர்பார்ப்புடன் இந்தாண்டு பொங்கலுக்கு வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கியுள்ள இந்தப் படத்தை சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ளது. முதல் நாளில் சிறப்பான ஓபனிங்குடன் மாஸ் காட்டிய கேப்டன் மில்லர், அடுத்தடுத்த நாட்களில் சரிவை சந்தித்ததாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் 6வது நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் குறித்து தற்போது பார்க்கலாம்.
கேப்டன் மில்லர் 6வது நாள் பாக்ஸ் ஆபிஸ்
தனுஷின் கேப்டன் மில்லர் கடந்த வாரம் 12ம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக வெளியானது. அருண் மாதேஸ்வரன் இயக்கிய இந்தப் படம் பீரியட் ஜானரில் ஆக்ஷன் மூவியாக உருவாகியுள்ளது. அருண் மாதேஸ்வரனின் முதல் இரண்டு படங்களான ராக்கி, சாணிக் காயிதம் ஆகியவையும் ரொம்பவே அதிக வன்முறை காட்சிகளுடன் உருவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், முதன்முறையாக தனுஷுடன் கேப்டன் மில்லர் படத்தில் இணைந்தார் அருண் மாதேஸ்வரன். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இந்தப் படம் பீரியட் ஜானரில் உருவாகியுள்ளது. ரிலீஸுக்கு முன்னரே கேப்டன் மில்லர் டீசர், ட்ரெய்லர் ஆகியவை படம் மீதான எதிர்பார்ப்பை எகிறச் செய்தது. இதனால் முதல் நாளில் இருந்தே சிறப்பான ஓபனிங் கிடைத்தது. ஆனால், நெகட்டிவான விமர்சனங்களால் அடுத்தடுத்த நாட்களில் கேப்டன் மில்லர் வசூலில் தடுமாறத் தொடங்கியது.
அதன்படி முதல் நாளில் 8.7 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது கேப்டன் மில்லர். இரண்டாவது நாளில் 7.45 கோடி, மூன்றாவது நாளில் 7.25 கோடி ரூபாய் வசூல் செய்திருந்தது. அதன் தொடர்ச்சியாக 4வது நாளில் 6.60 கோடியும் ஐந்தாவது நாளில் 4.80 கோடி ரூபாயும் கலெக்ஷன் செய்திருந்தது. இந்நிலையில், பொங்கல் விடுமுறையின் இறுதி நாளான நேற்று கேப்டன் மில்லர் வசூல் நிலை இன்னும் மோசமாகியுள்ளது.
அதாவது ஆறாவது நாளில் 3 கோடி ரூபாய் மட்டுமே வசூல் செய்துள்ளதாம் கேப்டன் மில்லர். அதனடிப்படையில் மொத்தம் 6 நாட்களில் 38 முதல் 40 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளது. ஆனால் இதுபற்றி படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனிடையே சோஷியல் மீடியா ட்ராக்கர்களின் அப்டேட் படி, கேப்டன் மில்லர் இதுவரை மொத்தமாக 75 கோடி ரூபாய் வரை வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவித்துள்ளனர்.
சோஷியல் மீடியா ட்ராக்கர்கள் கொடுத்துள்ள அப்டேட் படி, கேப்டன் மில்லர் முதல் நாளில் 16, இரண்டாவது நாளில் 14, மூன்றாவது நாளில் 15 என முதல் 3 நாட்களில் 45 கோடி ரூபாய் கலெக்ஷன் என குறிப்பிட்டுள்ளனர். அதேபோல், 4வது நாளில் 13, ஐந்தாவது நாளில் 12, ஆறாவது நாளான நேற்று 10 கோடி என மொத்தம் 75 கோடி வரை கலெக்ஷன் செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.


Click it and Unblock the Notifications











